Tuesday, November 27, 2007

தேசியத் தலைவரின் மாவீரர் உரை 2007

மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்...


மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்...
புலிகளின் தாகம் தமீழிழத் தாயகம்...

Thursday, November 22, 2007

Wednesday, November 21, 2007

தல-தளபதி சந்திப்பு!பின்னணியில் மனைவிகள்!










சென்னை நீலங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மனைவி ஷாலினியுடன் அஜித் சென்று வந்தது இரண்டு நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

"ராஜாவின் பார்வையிலே" படத்தில் தான் 'தல' அஜித் 'தளபதி' விஜய் ஜோடி சேர்ந்து அரிதாரம் பூசினார்கள். அதன் பிறகு இரண்டு பேருமே தனி தனி ரூட்டில் வெற்றி கொடி கட்டினார்கள்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி , ரஜினி-கமல் வரிசையில் விஜய்-அஜித் ஜோடி இடம் பிடித்தது. இரண்டு பேருமே வசூலை அள்ளி குவித்தனர். விஜய் ...தளபதி ஆனார். அஜித்...தல என பட்டம் சூட்டப்பட்டார்.

அதன் பிறகு வழக்கமான ரசிகர் மன்ற மோதல்கள் உண்டாக்கின. போஸ்டர் யுத்தம் வெடித்தது. பண்ச் டயலாக் இரண்டு பெயரின் படங்களிலும் பொறி பறந்தன. தீனா படத்தில் தான் 'தல' பட்டம் சூட்டப்பட்டார் அஜித். அதில் தான் எதிர் வசனங்கள் ஆரம்பமானது. அதை தொடர்ந்து திருமலை படத்தில் விஜய் பேசிய வசனங்களில் நேரடி தாக்குதல் ஆரம்பமானது. அப்படி வாசன மோதல்கள் தொடர்ந்ததால் தல-தளபதி ரசிகர்களும் திரை அரங்குகளில் மோதி கொண்டனர். இந்த மோதல் இரண்டு நடிகர்களுக்குமே வசூல் ரீதியாகவும் கை கொடுத்ததால் அதை ஓரளவிற்கு வளர்த்து விட்டார்கள் சினிமாகாரர்கள். இரண்டு பேரும் பொது இடங்களில் சந்திப்பதும் இல்லை என்பதால் ஒரு இடைவெளி உண்டானது.

இப்படி ஒரு சூழலில் நடந்த சந்திப்பு என்பதால் சாதாரணமான செய்தி என்றில்லாமல் ஸ்பெஷல் செய்தி என்றகி விட்டது. எப்படி நடந்தது இந்த சந்திப்பு என விசாரித்தால் ...ஷாலினி & சங்கீதா ஜோடி தான் காரணம் என்கிறார்கள். திருமண வீடு ஒன்றில் சந்தித்து கொண்ட ஷாலினியும், சங்கீதாவும் நண்பிகள் ஆனார்கள். இந்த நட்பு பிறகு போன் மூலம் வளர்ந்து ...நெருக்கமனதாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவிகள் இரண்டு பேரும் தங்கள் கணவர்களிடம் அந்த நட்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு குடும்பமும் சந்திக்கலாம் என்ற ஐடியாவை ஷாலினி சொல்ல உடனே சங்கீதாவும் தளபதியிடம் நேரம் கேட்டிருக்கிறார். இந்த சமயத்தில் தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த அஜித்-விஜய் இருவருக்கும் அருகருகே சீட் போடப்பட்டிருந்தது. அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் உண்டாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து தான் கர்பிணியாக இருக்கும் மனைவி ஷாலினியை அழைத்து கொண்டு விஜய் வீட்டிற்கு சென்றாராம் அஜித். வாசல் வரை வந்து வரவேற்றது விஜய்-சங்கீதா ஜோடி. இரண்டு குழந்தைகள் பெற்ற அனுபவத்தில் ஷாலினிக்கு சில அட்வைஸ் கொடுத்தாராம் சங்கீதா. விரைவில் திருவான்மியூரில் ஈள்ள அஜித் வீட்டிற்கு விஜய் தம்பதிகள் செல்வார்களாம். தமிழ் நாட்டில் அரசியலில் தான் எதிர் துருவங்கள் சந்திப்பதில்லை. சினிமா நாயகர்கள் நல்ல முன் உதாரணம் ஆகட்டும். தல தளபதி ரசிகர்களும் கை குலுக்குங்க!

Wednesday, November 07, 2007

தீபாவளி படங்கள்

இந்த வருட தீபாவளி தமிழ்சினிமாவுக்கு ஏற்றம் இல்லை.காரணம், தீபாவளிக்கு ரஜினி படம் இல்லை.எதிர்பார்த்த கமலின் 'தசாவதாரமும்' இல்லை.விக்ரமின் 'பீமா' வெளியாகும் என்று பார்த்தால் அதுவும் இல்லை.சிம்புவின் 'காளை', மாதவனின் 'எவனோ ஒருவன்', ஆர்யாவின் 'ஓரம்போ' ஆகியவையும இல்லை. இந்த தீபாவளி தமிழ் சினிமாவுக்கு இறக்கமும் இல்லை.காரணம் விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்', சூர்யாவின் 'வேல்' மற்றும் தனுஷின் 'பொல்லாதவன்.'தீபாவளிக்கு வெளியாகும் பெரிய படங்கள் இவை.இவைதவிர தமிழ்வாணனின் 'மச்சக்காரன்' ப்ரியாவின் 'கண்ணாமூச்சி ஏனடா''ஆக்ரா' படங்கள் லிஸ்டில் சேர்ந்து கொள்கின்றன.வெளியாகும் ஆறில் நான்கு பழுதில்லை என்றாலே, தீபாவளி அமர்க்களம்தான், தமிழ் சினிமாவுக்கு!

அழகிய தமிழ்மகன்
அப்பச்சன் தயாரித்துள்ளார். இயக்கியிருப்பது தரணியின் உதவியாளர் பரதன்.கதைப்படி விஜய்க்கு ஒரு வேடம்.படத்தில் இரண்டு வேடம்போல் தோன்றும் வித்தியாசமான திரைக்கதை.எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் இளைஞனாக வருகிறாராம் விஜய்.ஸ்ரேயா, நமிதா என இரண்டு ஜோடிகள்.ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே டீ கடைகளையும், தனியார் எப்.எம். களையும் ஆக்ரமித்து விட்டன.



வேல்
அண்ணன், தம்பி என சூர்யா இரண்டு வேடத்தில் நடிக்கும் படம்.அரிவாளை விட அறிவு பெரிது என்பது கதை.ஜோடி அசின். கிராமம் நகரம் என இருவித தோற்றத்தில் சூர்யா.அரிவாள் இல்லாமல் என்னால் படம் பண்ண முடியாது என்று சொல்லும் ஹரி, இயக்குனர்.வடிவேலின் காமெடி, யுவனின் இசை என களை கட்டுகிறது 'வேல்.'



பொல்லாதவன்
அப்பாவின் கனவை நிறைவேற்ற மூன்று மணிநேரம்-மட்டும் பொல்லாதவனாக மாறும் இளைஞனின் கதை.தனுஷுக்கு ஜோடி திவ்யா. வெற்றிமாறன் இயக்கும் முதல் படம்.ஜீ.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.'எங்கேயும் எப்போதும்....' ரீ-மிக்ஸும் உண்டு.

மச்சக்காரன்
எதுவுமே இல்லாத ஒருவன், எல்லாமே உள்ள ஒருத்தி. இவர்கள் சந்தித்தால்?அதுதான் 'மச்சக்காரன்' கதை என்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.எதுவுமே இல்லாதவனாக ஜீவன். எல்லாமே இருப்பவராக காம்னா.யுவன் ஷங்கர்ராஜா இசை.ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றப்போகும் படம் என்கிறார் தமிழ்வாணன்.

கண்ணாமூச்சி ஏனடா
இளைஞர்களுக்கு ஏற்படும் காதல் பிரச்சனைகள்,நடுத்தர வயதினருக்கு வந்தால் என்ன ஆகும்என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ப்ரியா வி.சத்யராஜ், ராதிகா ஒரு ஜோடி, ப்ருதிவிராஜ், சந்தியா இளம் ஜோடி.யுவன் ஷங்கர்ராஜா இசை.நகைச்சுவைக்காகவே ஓடும் பல வாரம் என்கிறார்கள்.

ஆக்ரா
தாஜ்மஹாலில் பொம்மை விற்கும் பெண்ணின் காதல் கதை.இயக்குனர் சித்திரை செல்வன்.முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படம்.பாடல்கள் எழுதியிருக்கும் வைரமுத்து தவிர மற்றவர்கள் புதுசு கண்ணா புதுசு.

Friday, November 02, 2007

கண்ணீர் அஞ்சலி....

வான் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மற்றும் போராளிகளுக்கும் எமது இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்...

Thursday, November 01, 2007

காதல் கொண்டேன்

உன் மீது நான் கொண்ட பாசம்...
இது ஜென்மத்தில் மாறாத நேசம்...
நீயே நான் வாங்கும் சுவாசம்...
நீ என்னை நம்பினால் போவதில்லை மோசம்...

விஜய் நடிக்கும் 'குருவி' படத்தில் அவரது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


அழகிய தமிழ் மகன்' படத்தில் நடிக்கும் விஜய், அடுத்து 'குருவி' என்ற படத்தில் நடிக்கிறார். இதை தரணி இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவருக்குப் பதிலாக நயன்தாரா நடிக்கிறார். இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது:
இப்போது விஷாலுடன் 'சத்யம்' படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து விஜய்யின் 'குருவி' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடினேன். இப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
வரும் 15 ம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. நவம்பர் மாதத்திலிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். ஆர்.டி.ராஜசேகர் இயக்கத்தில் ஆரியா ஜோடியாக நான் நடிப்பதாக வந்த தகவல் உண்மையில்லை. இவ்வாறு நயன்தாரா சொன்னார்.

Thursday, October 25, 2007

Wednesday, October 24, 2007

வீரச்சாவடைந்த கரும்புலிகளின் விபரங்கள் வருமாறு

வரலாற்று புகழ்மிக்க 'எல்லாளன்' படைநடவடிக்கையில் வீரச்சாவடைந்த விசேட கரும்புலிகளினது விபரங்கள் தமிழீழவிடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரு லெப்ரினன் கேணல்கள், ஆறு மேஜர்கள், 12 கப்ரன்கள், ஒரு லெப்ரினன் தர கரும்புலிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

1.லெப்.கேணல் வீமன் (கே.பார்த்தீபன்) திரியாய், திருகோணமலை

2.லெப்.கேணல் இளங்கோ (ஆர்.பகீரதன்) சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

3.மேஜர் மதிதனன் (பி.தயாசீலன்) வேலணை, யாழ்ப்பாணம்

4.கப்ரன் தர்மினி (கே.நிர்மலா) கிளிநொச்சி

5.கப்ரன் புரட்சி (எஸ்.தனுசன்) புத்தூர், யாழ்ப்பாணம்

6.மேஜர் சுபன் (கே.ஜீவகாந்தன்) வரணி, யாழ்ப்பாணம்

7.மேஜர் இளம்புலி (ரி.கலைராஜ்) காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

8.மேஜர் காவலன் (எஸ்.சத்தியன்) பூநகரி, கிளிநொச்சி

9.கப்ரன் கருவேந்தன் (எம்.சதீஸ்குமார்) வட்டக்கச்சி, கிளிநொச்சி

10.கப்ரன் புகழ்மணி (ரி.புவனேஸ்வரன்) புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

11.மேஜர் எழில்இன்பன் (வி.பிரபாகரன்) கோண்டாவலி;, யாழ்ப்பாணம்

12கப்ரன் புலிமண்ணன் (கே.நந்தகுமார்) குடத்தனை, யாழ்ப்பாணம்

13.கப்ரன் அன்புக்கதிர் (வி.திலீப்குமார் ஒட்டுசுட்டான், முல்லைதீவு

14.கப்ரன் சுபேசன் (என்.மகராஜ்) முருங்கன், மன்னார்

15.கப்ரன் செந்தூரன் (கே.தினேஸ்) யாழ்ப்பாணம்

16.லெப்.அருண் (பி.திவாகரன்) மண்டைதீவு, யாழ்ப்பாணம்

17. கப்ரன் பஞ்சசீலன் (எஸ்.கஜேந்திரன்) கிரண், மட்டக்களப்பு

18.மேஜர் கனிகீதன் (ஆர்.கந்தசாமி) செங்கலடி, மட்டக்களப்பு

19.கப்ரன் ஈகப்பிரயா (கே.கீதாஞ்சலி) திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

20. கப்ரன் அருள்மலர் (எஸ்.உதயா) ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

21.கப்ரன். ஈகத்தேவன் (ரி.மோசிகரன்) யாழ்ப்பாணம்

Saturday, August 11, 2007

நடிகை ஜோதிகாவுக்கு பெண் குழந்தை....

நடிகை ஜோதிகாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது.காதல் திருமணம்நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.அப்போது 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11&ந் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சூர்யா&ஜோதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.பெண் குழந்தைஅதைத் தொடர்ந்து ஜோதிகா கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவர், பிரசவத்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்றிரவு 8 மணிக்கு சேர்க்கப்பட்டார்.9.22 மணிக்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 'சிசேரியன் ஆபரேஷன்' மூலம் பிரசவம் நடந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இனிப்புகுழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய தந்தை நடிகர் சிவகுமார், தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை போன் மூலம் தெரிவித்தனர். நடிகர் சூர்யா நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.இதுகுறித்து நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:&நல்ல உள்ளங்கள் வாழ்த்துஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பாகங்களிலும் வாழும் மக்கள் தங்களது பிள்ளை போல் நினைத்த சூர்யா&ஜோதிகா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பூஜைகள் நடத்தி பலர் வேண்டிக் கொண்டனர். மானசீகமாக இந்த இளஞ் ஜோடியை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மகிழ்வான செய்தியை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.பிறந்த இந்த பெண் குழந்தை எல்லா சிறப்பும் பெற்று வீடும், நாடும், போற்றிடும் அளவுக்கு பல்லாண்டு பெருமைக்குரிய வாழ்வு வாழ வாழ்த்திட வேண்டும் என்று அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tuesday, August 07, 2007

Thursday, June 28, 2007

வசூலில் முந்தும் சிவாஜி

முதல் வாரம் கொஞ்சம் டல்லாக இருப்பது போல தோன்றிய சிவாஜி படம் இந்த வாரம் தியேட்டர் நிறைய கூட்டம் கூட தொடங்கியிருக்கிறது.

போன வாரம் டல்லாக இருந்ததுக்கான காரணம் கன்னாபின்னாவென்று இருந்த டிக்கெட் விலைதானாம். இப்போது டிக்கெட் விலை குறைய கூட்டம் கட்டி ஏறுகிறதாம்.

அதுவும் வெளி மாநிலங்களில் மிகப்பெரிய வசூலை அள்ளும் என்கிறார்கள். மூன்று கோடிக்கு விற்கப்பட்ட கன்னட உரிமை 6 கோடி வசூல் செய்யும் என்கிறார்கள்.

அதேபோல் ஆந்திராவிலும் இப்போது படத்திற்கு மவுசு கூடிவிட்டதாம். 20 கோடிக்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமை 40 கோடியை எட்டும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் பிரச்னை இல்லாமல் வசூல் சாதனை புரியும் என்கிறார்கள்.

Wednesday, June 27, 2007

கேமராமேன், இயக்குநர் ஜீவா மரணம், ரஷியாவில் உயிர் பிரிந்தது...

சென்னை: தாம் தூம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த பிரபல
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அங்கு ஹோட்டல் அறையில் மாரடைப்பால்
மரணமடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜீவா(44). இவர்
மலையாளப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத்
தொடங்கியவர்.

தமிழில் அக்னி நட்சத்திரம், தேவர் மகன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில்
அவர் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார்.

பின்னர் காதலன் படம் மூலம் ஒளிப்பதிவாளரானார். அதன் பின்னர் இயக்குநர்
ஷங்கரின் பெரும்பலான படங்களுக்கு ஜீவாதான் கேமராமேனாக இருந்துள்ளார்.

ஒளிப்பதிவில் பல உத்திகளைப் புகுத்தி தமிழ் சினிமாவுக்கு புது
கெளரவத்தைத் தேடிக் கொடுத்தவர் ஜீவா. ஒளிப்பதிவாளராக விளங்கி வந்த ஜீவா
பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 12பி, உள்ளம் கேட்கமே, சமீபத்தில்
வெளியான உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தாம்தூம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஜெயம் ரவி உள்ளிட்டோர்
நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ரஷ்யாவில் நடந்து வந்தது.
இதற்காக படப்பிடிப்புக் குழுவினருடன் ரஷ்யா சென்றிருந்தார் ஜீவா.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்த அவர் இன்று படப்பிடிப்பு
முடிந்து அவர் சென்னை திரும்புவதாக இருந்தார். இந்த நிலையில் நேற்று
ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவரை
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜீவா பரிதாபமாக
இறந்தார்.

ஜீவாவுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஜீவாவின் உடல் நாளை சென்னைக்குக்
கொண்டு வரப்படுகிறது.

ஜீவாவின் மரணத்தால் தமிழ்த் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில்
மூழ்கியுள்ளனர்.

Tuesday, June 26, 2007

Wednesday, May 23, 2007

சண்டை காட்சியில் நடித்த போது நடிகர் ஜீவன் படுகாயம்

ஏணிப்படியில் நின்று சண்டை போட்டபோது, ஏணி சரிந்ததால் நடிகர் ஜீவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவருடைய காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது.Ôமச்சக்காரன் ´´காக்க காக்க´´ படத்தில் வில்லனாகவும், ´´திருட்டுப்பயலே´´ படத்தில் வில்லத்தனம் பொருந்திய கதாநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். இவர் கதாநாயகனாக நடித்த ´´நான் அவன் இல்லை´´ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து ஜீவன், ´´மச்சக்காரன்´´ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காம்னா நடிக்கிறார். தமிழ்வாணன் டைரக்டு செய்கிறார்.சண்டை காட்சிஇந்த படத்துக்காக, ஒரு போலீஸ் நிலையத்தில் சண்டை நடப்பது போன்ற காட்சி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள மணிமஹாலில் படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் அமைத்த இந்த சண்டை காட்சியில் ஜீவனுடன், 6 ஸ்டண்ட் நடிகர்கள் மோதினார்கள்.ஜீவன், ஒரு ஏணிப்படியில் ஏறி நின்றபடி, ஒரு ஸ்டண்ட் நடிகரை பின்னால் எட்டி உதைப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டார்கள். அந்த காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஏணிப்படி சரிந்தது. இதனால் ஜீவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.தலையில் அடிஅவருடைய இடது காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜீவனை, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவருடைய காலிலும், தலையிலும் ´´ஸ்கேன்´´ எடுத்து பார்க்கப்பட்டது. அதில், கோளாறு எதுவும் இல்லாததால், சிகிச்சைக்குப்பின் ஜீவன் வீடு திரும்பினார்.

Sunday, May 13, 2007

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது


பட்டதாரி பெண்ணை மணக்கிறார்.நடிகர் ஸ்ரீகாந்துக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மணப்பெண், ´´எம்.பி.ஏ.´´ படித்த பட்டதாரி ஆவார். இவர்கள் திருமணம், அடுத்த மாதம் (ஜூன்), சென்னையில் நடக்கிறது.ஸ்ரீகாந்த்தமிழ் பட உலகில் உள்ள இளம் கதாநாயகர்களில் குறிப்பிடத்தக்கவர், ஸ்ரீகாந்த். இளம் ரசிகைகளின் கனவு நாயகர்களில் இவரும் ஒருவர். ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த், ´´ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மெர்க்குரி பூக்கள், ஜூட், பம்பரக்கண்ணாலே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகள் பெயர், வந்தனா. ´´எம்.பி.ஏ.´´ பட்டதாரி. சுவிட்சர்லாந்தில், ஓட்டல் மானேஜ்மெண்ட்டும் படித்து இருக்கிறார். இவர், துபாயில் தொழில் அதிபராக இருக்கும் சாரங்கபாணியின் மகள் ஆவார்.ஜூன் மாதம் நடக்கிறதுஸ்ரீகாந்த்&வந்தனா திருமணம், அடுத்த மாதம் (ஜூன்) சென்னையில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.திருமணம் செய்துகொள்வது பற்றி நடிகர் ஸ்ரீகாந்த், இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் நான் முடிவு செய்து இருந்தேன். இப்போது எனக்கு 27 வயது முடிந்து 28 வது வயது நடக்கிறது. இதுதான் எனக்கு திருமணம் செய்வதற்கு பொருத்தமான வயது என்று அம்மாவும், அப்பாவும் கருதுகிறார்கள்.அம்மா&அப்பா மனதை சந்தோஷப்படுத்துவது என் கடமை. திருமணம் என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு விஷயம். திருமணத்துக்குப்பின், என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.குடும்ப நண்பர்கள்நானும், மணப்பெண் வந்தனாவும் குடும்ப நண்பர்கள். வந்தனா, நிறைய படித்து இருக்கிறார். அழகானவர். நல்ல குணம்.நான் முன்பு மாதிரி அதிக படங்களை ஒப்புக்கொள்வதில்லை. சிறந்த கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். அப்படி தேர்வு செய்த படம்தான், ´´ம்´´ என்னை திரையுலகுக்கு அறிமுகம் செய்த டைரக்டர் சசிதான், இந்த படத்தை இயக்குகிறார்.அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் என்று நம்புகிறேன் இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

´´சிவாஜி´´ திரைப்படம் வருகிற 31ஆம் திகதி வெளிவருகிறது....


Spider Man 3 புதிய திரைப்படம்...


Download it from...

Part 1- 695 MB
http://d01.megashares.com/?d01=db5f397



Part 2 - 696 MB
http://d01.megashares.com/?d01=a86b28b

Thursday, May 03, 2007

கூகிலும் நான் வாழ்ந்த புங்குடுதீவு வீடும்...

உங்கள் வீட்டை பார்ப்பதற்கு....
1.go to www.google.com
2.click on Maps
3.click on Satellite (not Map, not Hybrid)
4.double click your place, it will zoom..
5.see your house
6.and enjoy...

Wednesday, May 02, 2007

Thursday, April 26, 2007

சோதிட முறைப்படி ஐசுக்கு நான்காவது கணவர் அபிசேக்

இலங்கைக்கே உலகக் கிண்ணம் சோதிடர்கள் அடித்துக் கூறுகின்றனர்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவது உறுதி என்கின்றனர் இலங்கை சோதிடர்கள்.
இந்தியாவைப் போலவே இலங்கையிலும் சோதிடப் பித்து அதிகம். "சோதிடம்தனை இகழ்" என்றார் பாரதியார், "ஆனால், பார்க்காதே" என்று சொல்லவில்லை. எமக்குச் சாதகமாக சோதிடர் கூறினால் உற்சாகமாக இருப்போம். இல்லாவிட்டால், "இதையெல்லாம் நம்புவார்களா?" என்று பகுத்தறிவோடு கேட்டுவிட்டு வேலையைப் பார்ப்போம்.

இப்போது விடயத்துக்கு வருவோம். இலங்கைக்குத்தான் கிண்ணம் என்று அரிசேன் அஹுபுடு, பிரியந்த ரத்னாயக்க என்று இரண்டு சோதிடர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

`இலங்கைக்கு கிண்ணம் உறுதியானால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு "உரிய நேரத்தில்" இலங்கை அணி ஹோட்டலைவிட்டு புறப்படுவதுதான் முக்கியம்' என்றார் அரிசேன் அஹுபுடு.

அப்படி புறப்பட்டிருப்பார்களா என்பது அரையிறுதிச் சுற்றின் முடிவிலும் அதன் பிறகு இலங்கை வெற்றி பெற்றால் இறுதிச் சுற்று ஆட்ட முடிவிலும் தெரிந்து விடுமென்றார்.

பிரியந்த ரத்னாயக்க நிபந்தனை ஏதும் போடாமல் இலங்கையின் வெற்றி உறுதி என்பதற்கு ஏற்கும்படியான காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறார்.

தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியாவுக்கு இப்போது நல்ல யோக திசையாம். எனவே, அவரும் சாதனை படைத்து அணியும் சாதனை படைப்பது உறுதியென்கிறார்.

´´முத்த விவகாரம்´´ சில்பாவுக்கு கைது வாரண்டு


சினி செய்திகள்...


Friday, April 20, 2007