Saturday, August 11, 2007

நடிகை ஜோதிகாவுக்கு பெண் குழந்தை....

நடிகை ஜோதிகாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது.காதல் திருமணம்நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.அப்போது 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11&ந் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சூர்யா&ஜோதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.பெண் குழந்தைஅதைத் தொடர்ந்து ஜோதிகா கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவர், பிரசவத்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்றிரவு 8 மணிக்கு சேர்க்கப்பட்டார்.9.22 மணிக்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 'சிசேரியன் ஆபரேஷன்' மூலம் பிரசவம் நடந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இனிப்புகுழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய தந்தை நடிகர் சிவகுமார், தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை போன் மூலம் தெரிவித்தனர். நடிகர் சூர்யா நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.இதுகுறித்து நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:&நல்ல உள்ளங்கள் வாழ்த்துஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பாகங்களிலும் வாழும் மக்கள் தங்களது பிள்ளை போல் நினைத்த சூர்யா&ஜோதிகா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பூஜைகள் நடத்தி பலர் வேண்டிக் கொண்டனர். மானசீகமாக இந்த இளஞ் ஜோடியை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மகிழ்வான செய்தியை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.பிறந்த இந்த பெண் குழந்தை எல்லா சிறப்பும் பெற்று வீடும், நாடும், போற்றிடும் அளவுக்கு பல்லாண்டு பெருமைக்குரிய வாழ்வு வாழ வாழ்த்திட வேண்டும் என்று அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments: