Sunday, November 23, 2008

மாவீரர் தின உரையில் பிரபாகரன் சொல்லப்போவது என்ன?-ஒரு ஆய்வு


அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சியடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள்,

இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு அவலம் என்று என்ன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தவாறு எதிர்வரும் 27ஆம் திகதி புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறார்.


புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிலையையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது.

பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்த்துகின்ற உரை புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்க உரையாக அமைவது வழக் கம். அதாவது கடந்த வருட நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்த கருத்துக்களும் அடுத்த வருடத்துக்கான கொள்கைப் பிரகடனமாகவும் இந்த உரை அமைவதுண்டு.

இந்தியப் படைகளின் காலத்தில் புலிகள் சந்தித்த நெருக்கடிக்குப் பின்னர் நிலங்களைத் தக்கவைப்பதில் பெரும் நெருக்க டிகளை எதிர்நோக்கியிருக்கின்ற தருணத்தில் இந்த வருட உரை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இடங்களில் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை சுடரேற்ற முடியாத நிலை. இவை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன.

இப்போது கிளிநொச்சியின் கனகபுரம், விசுவமடு, முல்லைத்தீவின் முள்ளியவளை, யாழ்ப்பாணத்தின் உடுத்துறை மற்றும் மணலாறின் சில கல்லறைத் தோட்டங்கள் மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தான் மாவீரர் நாளில் சுடரேற்றும் நிகழ்வு நடைபெறப் போகிறது.

இந்த முக்கியமான கால கட்டத்தில் பிரபாகரனின் உரை முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்படுகிற அதேவேளை அந்த உரையை எவ்வாறு நிகழ்த்துவதென்ற நெருக்கடி அவருக்கு இருக்கவே செய்யும்.

கடந்த வருட உரையில் இலங்கை அரசாங்கத்தின் போர் வெறிக் கொள்கைக்கு சர்வதேசமே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டியிருந்த பிரபாகரன், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் தார்மீக நியாயத்தைப் புரிந்து கொண்டு சர்வதேசம் அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் சர்வதேசத்தின் காதில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ பெயருக்கு அவ்வப்போது இணைத்தலைமை நாடுகள் என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டங்கள் இராணுவத்தீர்வு சாத்தியமற்றதென்ற வழக்கமான ஆலோசனையோடு முடிந்து போனதே தவிர, இப்போது இலங்கைப் போரை மேற்குலக நாடுகள் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இந்தப் போர் தொடர்பாக பிரபாகரன் எடுக்கப் போகின்ற முடிவு என்ன என்ற கேள்வி எழுகிறது ? இதற் கான பதில் பலரினதும் எதிர்பார்ப்புக்குரிய விடயமாகியிருக்கிறது.

இந்தப் போர் நீண்டு செல்லுமா? தொடர்ச்சியாக நிலங்களை இழந்து வந்திருக்கின்ற புலிகள் இயக்கத்தின் நிலை எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருக்கும்? புலிகள் இயக்கம் எதற்காக இன்னமும் தற்காப்பு நிலையிலேயே இருக்கிறது? தாக்குதல் நிலையில் இருந்து செயற்படக் கூடிய பலம் புலிகளிடம் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு இந்த வருட மாவீரர் தின உரையில் பதில் கிடைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

தற்காப்பு நிலையில் தான் இருக்கிறோம் என்று தொடர்ச்சியாகப் புலிகள் கூறி வந்திருக்கின்ற நிலையில் அவர்களின் ஆளுகைப் பரப்பு சுருங்கிப் போயிருக்கிறது.

இது புலிகளின் பலத்தின் மீதான கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.

புலிகள் பலம் குறைந்து போகவில்லை என்பது வேறு விடயமாக இருப்பினும்

சாதாரண மக்களின் பார்வையில் புலிகளின் பலம் குறித்த சந்தேகம் கேள்வி எழுந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தக் கட்டத்தில் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் தின உரையானது புலிகள் இயக்கத்தின் பலத்தை அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமையும் என்றே எதிர்பார்க்கலாம்.

அதேவேளை சர்வதேசத்தின் நெருக்குதல் காரணமாகவே புலிகள் இயக்கம் தற்காப்பு நிலையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாகவும் இந்த வருட மாவீரர் தின உரை போர்ப் பிரகடனத்தை வெளியிடும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்புக்கள் சிலரிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், புலிகளின் இந்த நீண்ட விட்டுக் கொடுப்பு அல்லது பின்வாங்கலுக்கு தந்திரோபாய பின்நகர்வு என்ற வார்த்தை பொருத்தமானதாக இருக்கும் என்று சாதாரண மக்கள் நம்பும் நிலையில் இல்லை.

எனவே போர்ரின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஓர் உரையை, அடுத்த கட்டத்தில் புலிகள் இயக்கம் என்ன செய்யப் போகிறதென்ற விளக்கத்தையே பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அதேவேளை இந்த உரையில் முக்கியமாக சர்வதேசத்தை நோக்கி தெளிவான சில முடிவுகளை புலிகள் அறிவிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சர்வதேசத்தின் விருப்பு வெறுப்புகளுக்காக இழந்தது போதும் என்ற தொனிப்பட இந்த வருட உரையில் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெ?கிறது.

போரை நிறுத்துவதில் இலங்கை அரவைழிக்குக் கொண்டு வருவதில் அல்லது இலங்கை மீதான கண்டிப்பான நடவடிக்கை எடுப்பதில் சர்வதேசம் தவறிப் போயிருப்பதை பிரபாகரன் தனது உரையில் முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேசத்தின் நிலைப்பாடுகள், அணுகுமுறைகளில் காணப்படும் தொய்வான தன்மையே இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராணுவப் போக்குக்கு காரணம் என்று புலிகள் உறுதியாக நம்புகின்றனர். எனவே அவர்கள் தமது கண்டனத்தை சர்வதேசத்தை நோக்கியும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி தொடர்பாக நன்றிபூர்வமான கருத்துகளை வெளியிடுவதுடன் நின்றுவிடாது இத்தகைய ஆதரவை பிரபாகரன் தொடர்ந்து வழங்குமாறு வேண்டி நிற்பதாகவும் அவரது உரை அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது கொளுந்து விட்டெரியும் ஈழத்தமிழர் ஆதரவுப் பிரச்சினையை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் புலிகளின் தீர்க்கமாஞீ கருத்துக்கள் இந்த மாவீரர் தினத்தில் வெளியாகலாம்.

இவற்றோடு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது முக்கியமான தேவையாகவும் பிரபாகரனுக்கு இருக்கிறது.

ஏனென்றால் அவர்களின் நிதிப்பங்களிப்பு புலிகளின் இயக்கத்தின் உயிர்வாழ்வுக்கு முக்கியமானது.

இன்றைய நிலையில் நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் தமிழ்மக்கள் மத்தியில் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை மிகவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லை விடவும் செயலில் வேகம் காட்டுபவர் பிரபாகரன். ஆகையால் இன்றைய நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அவர் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டிருப்பாரா என்ற சந்தேகமும் உள்ளது.

ஆனால், சொல்லிலோ செயலிலோ இந்தக் கேள்விகளுக்கு தமிழ்மக்கள் விடை தேடிக் கொண்டிருப்பது உண்மை.

அதேவேளை சர்வதேசம் புலிகளின் நிலைப்பாடுகளை அறிய ஆசைப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்து பேச்சு நடத்த வருமாறு விடுத்து வரும் அழைப்புகளின் பின்னணியில் புலிகளின் நிலைப்பாட்டை அறிய சர்வதேசம் ஆசைப்படுகிறது. இதற்கான பதில் பிரபாகரனின் உரையில் நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே தான் கடந்த காலங்களை விடவும் இம்?றை மாவீரர் தின உரை கனதியானதாக இருக்கும் என்பது பொதுவான கணிப்பு.

Friday, November 21, 2008

ராஜபக்ஷே பிரதர்ஸ்! இலங்கையை இயக்கும் டீம்!--விகடன்

நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே!

64-வது பிறந்த நாளை இந்த 19-ம் தேதி கொண்டாடுகிறார் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியான மகிந்தா ராஜபக்ஷே!

லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் அங்குள்ள முக்கிய கட்சிகள். இப்போதைய ஜனாதிபதி மகிந்தாவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சந்திரிகாவின் அப்பா பண்டாரநாயகாவும் மகிந்தாவின் அப்பா ராஜபக்ஷேவும்தான் அந்தக் கட்சியை ஆரம்பித்தவர்கள். நம்மூர் நெடுஞ்செழியன், அன்பழகன் போல ராஜபக்ஷே
'இரண்டாம் கட்டத் தலைவராகவே பின் தங்கிவிட, பண்டாரநாயகா குடும்பம் கட்சியை மொத்தமாக ஆக்கிரமித்தது. அவருக்குப் பின் மனைவி, மருமகன், மகள் சந்திரிகா என வாரிசுகள் வரிசையாக வந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்தது ராஜபக்ஷேவின் குடும்பம். இத்தனை அமைதியான குடும்பத்தில் இருந்து ஒருவரைத் தன் பின்னால் வைத்துக்கொண்டால் அடக்கமாக இருப்பாரே என்று மகிந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் சந்திரிகா.

அடுத்தடுத்த மாதங்களில் சந்திரிகாவுக்கு இறங்கு முகம். கட்சி, ஆட்சி இரண்டையும் ராஜபக்ஷே குடும்பம் கபளீகரம் செய்துவிட்டது. கொழும்புவில் தனி ஆளாக இப்போது இருக்கிறார் சந்திரிகா. அவரது குடியுரிமையைப் பறிக்கப்போவதாகச் சில மாதங்களுக்கு முன் வதந்தி பரவியது. இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசி, அவரை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் தமிழ் எம்.பி-க்கள்தான்.

இவ்வளவு பெரிய இந்தியாவுக்கே 80 மந்திரிகள்தான். ஆனால், 225 எம்.பி-க்கள் கொண்ட இலங்கையில் இப்போது 118 பேர் அமைச்சர்கள். 3 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், அங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளையும் இரண்டாக உடைத்தார் ராஜபக்ஷே. கட்சி மாறிகள் அனைவருக்கும் மந்திரிப் பதவிகள் அளித்தார். இப்போது அவரது ஆட்சியை ஆதரிக்கும் எம்.பி-க்களில் 6 பேர் தவிர, அனைவரும் அமைச்சர்கள். இலாகா இல்லாத அமைச்சர்களே அதிகம். 'அட, அந்த 6 பேர் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கும் விறகுத் துறை, சுடுகாட்டுத் துறை என்று எதையாவது கொடுக்கக் கூடாதா?'' என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் தொடர்ந்து கிண்டல் செய்வார்கள். வருஷத் துக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு ராஜபக்ஷே வருவார். ஆண்டு தொடக்கத்தில் அவையைத் தொடங்கிவைக்க வருவார். இப்போது அந்தச் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. நிதி அமைச்சராகவும் ராஜபக்ஷே இருக்கிறார். எனவே, பட்ஜெட் சமர்ப்பிக்க சபைக்கு வருவார். மற்றபடி அவரது அனைத்து அலுவல்களும் அவரது அலரி மாளிகையில்தான். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இருக்கிறது இந்த மாளிகை. பொதுவாக ஜனாதிபதிக்கென, கோட்டைப் பகுதியில்தான் வீடு. ஆனால், அது பாதுகாப்பானது இல்லை என்று இங்கு வந்துவிட்டார் ராஜபக்ஷே.

இந்தப் பகுதி, சிறப்பு உயர் பாதுகாப்பு வளையம் உள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு முறைப்படி இதற்காகத் தனிச் சட்டமே போட்டுள்ளார்கள். இதைச் சுற்றியுள்ள தெருக்கள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், கடற்கரையோரம் அனைத்தும் இதில் அடங்கும். இங்கு இரண்டு பேருக்கு அதிகமாகக் கூடி நிற்கக் கூடாது. வாகனங்கள் போகலாம். நிற்க அனுமதி இல்லை. லாரி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராணுவம், போலீஸ் வசம் இந்த இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தான் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களையும் இங்குள்ள அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவார் ராஜபக்ஷே. பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை. அலரி மாளிகையில் மட்டும் குண்டு துளைக்காத 31 வாகனங்கள் இருப்பதாகத் தகவல்.

ராஜபக்ஷேவின் மனைவி பெயர், ஷிராந்தி. இவர் வனிதா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் நாமல், லண்டனில் சட்டம் படித்தவர். அரசு செலவில் இவர் அனுப்பப்பட்டதாகப் புகார்கள் சொல்லப்பட்டன. டென்னிஸ், அத்லெட்டிக் வீரரான இவர், இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். யாழ்குடா நாட்டில் நீச்சல் குளம் வைத்து நடத்தி வருகிறார். அடுத்த மகன் யோஹித்த, இலங்கை கடற்படையில் இப்போது பயிற்சி பெற்று வருகிறார். மூன்றாவது மகன் ரோஹித்த, கல்லூரி மாணவர்.

ராஜபக்ஷேவுக்கு 6 சகோதரர்கள், 3 சகோதரிகள். இவர்கள் அரசாங்கத்தின் பல்வேறு முனைகளை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரது மூத்த அண்ணன் சாமல் ராஜபக்ஷே, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருக்கிறார். இன்னொரு சகோதரர் கோத்தபயா ராஜபக்ஷே, பாதுகாப்புத் துறை செயலாளராக இருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன் புலிகள் இவருக்குக் குறி வைத்தார்கள். கோத்தபயா கலந்து கொண்ட கூட்டத்துக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆட்டோ திடீரென்று நுழைந்து வெடித்தது. இவருக்குப் பாதுகாப்பாக நின்றிருந்த இரண்டு கமாண்டோ படையினர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். அவர்களிடமிருந்து தெறித்த ரத்தம் கோத்தபயாவின் சட்டையை நனைத்தது.

இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ஷே. ஜனாதிபதியின் தூதராகச் சமீபத்தில் டெல்லி வந்து போனவர். அமெரிக்காவில் இருந்தவரைத் திடீரென்று அழைத்து நியமன எம்.பி-யாக ஆக்கினார் அண்ணன். அப்போது கட்சியில் எதிர்ப்பு கிளம்ப, ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

சாமல், கோத்தபயா, பசில் ஆகிய சகோதரர்கள் வைத்ததுதான் சட்டம். 'இலங்கை ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது!' என்று ரணில் விக்கிரமசிங்கேவும், 'ராஜபக்ஷே பிரதர்ஸ் கம்பெனியாக மாறிவிட்டது' என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி-க்களும் கண்டனம் கிளப்புகிறார்கள். ஆட்சியை நடத்துவது முதல் வெளிநாடுகள் போய் ஆயுதங்கள் வாங்கி வருவது வரை இவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. ராணுவத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியின் உத்தரவுகளை இவர்கள்தான் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்.

1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தின் முப்படைகளில் இருக்கிறார்கள். இதில் 10 ஆயிரம் பேர் விமானப் படையிலும், 20 ஆயிரம் பேர் கடற்படையிலும் உள்ளனர். 50 சதவிகிதப் படைகள் வடகிழக்கு மாகாணமான தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் ஏற்படுவது ராணுவத்தில் வழக்கமானதுதான். ஆனால், ராணுவத்தில் சேர்பவர்கள் சில மாதங்களிலேயே ஓடிப் போவது இங்கே அதிகமாக நடக்கிறது. சுமார் 14 ஆயிரம் பேர் இதுவரை ஓடிப் போயிருப்பதாகவும், அவர்களை மீண்டும் அழைத்து வர தேடுதல் தொடர்வதாகவும் இலங்கைப் பத்திரிகைகள் எழுதுகின்றன. 'ஒரு வீரனைத் தயாரிக்க அடிப்படையாக ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. ஒரு ராணுவ வீரன் ஓடும்போது ராணுவத்தின் கட்டமைப்பு சிதைகிறது!' என்று அவை எழுதுகின்றன.

ராணுவத்துக்கு ஆட்களைத் திரட்டுவதைவிட, ஆயுதங்களைச் சேகரிப்பதில்தான் ராஜபக்ஷே அரசாங்கம் மும்முரமாக இருக் கிறது. சீனா, ஆயுதங்களைக் கொண்டு போய்க் குவிக்கிறது. 37.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதத் தளவாடங்களை கடந்த ஆண்டில் மட்டும் சீனா கொடுத்துள்ளது. போர் விமானங்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள், ஏவுகணைகள் இதில் அடங்கும். இவை தவிர, புத்தளம் மாவட்டத்தில் அனல் மின்நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவால் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி முடியவே இன்னும் 15 வருடங்கள் ஆகுமாம். சும்மா உதவுமா சீனா?

பாகிஸ்தான் சென்ற கோத்தபயா ராஜபக்ஷே, சில உத்தரவாதங்களை அங்கிருந்தும் பெற்று வந்துள்ளார். இப்படிப் பல காரியங் களை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் செய்து வருகின்றன.

ராணுவம் இப்போது மூன்று முனைகளில் தீவிரமாக நிற்கிறது. கிளிநொச்சியைக் கைப்பற்ற 57-வது படையணியும், பூநகரியை நோக்கிய நகர்வில் 58-வது படையணியும் உள்ளன. மணலாறு பகுதியில் ஏராளமான படைவீரர்கள் நிற்கிறார்கள். இவை அனைத்தும் தளபதி சரத் பொன்சேகாவின் கண் அசைவில் இயங்குகின்றன. அவர் அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகிறார். கால நீட்டிப்பு கொடுக்கப்படலாம். 'இன்னும் நான் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருஷம் இருக்கிறது. புலிகள் அமைப்பில் 3 ஆயிரம் புலிகள் இருக்கிறார்கள். நாளன்றுக்கு 10 புலிகள் வீதம் அனைவரையும் முடித்துவிடுவோம்!' என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தவர் இவர். இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து 'வெற்றி வருடமாக' 2008 அறிவிக்கப்பட்டது. பிரதமர் பதவி வகிக்கும் ரத்தின விக்கிரமநாயகா, 'இந்த ஆண்டில் புலிகள் முழுமையாக ஒடுக்கப்பட்டு அதற்கான கொண்டாட்டங்கள் நடத்தப்படும்' என்று அறிவித்தார். ஆனால், இதில் 10 சதவிகிதம்கூட இன்னும் நிறைவேறவில்லை என்று சிங்களக் கட்சிகள் கொந்தளிக்கின்றன.

அங்கு முக்கிய எதிர்க்கட்சி ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது பெரியது ஜனதா விமுக்தி பெரமுனா. இவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ராஜபக்ஷே சமீபத்தில் நடத்தினார். நம்மூரைப் போலத்தான் முக்கிய எதிர்க்கட்சிகள் வராமல் கூட்டம் நடந்து முடிந்தது. நாடாளுமன்றத்தில் 24 இடங்களைக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இருந்தாலும், ராஜபக்ஷேவுக்கு இருந்த ஒரே ஆறுதல், கருணா அணி.

புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா, அந்தக் கூட்டத்தில் முக்கியமானவராக இருந்தார். அவருடன் இருந்த பிள்ளையான், இப்போது கிழக்கு மாவட்டத்தின் முதலமைச்சர். ஆனால், அவர்கள் இரண்டு பேருக்கும் ஆகவில்லை. 'கருணா, படையை மட்டும்தான் கவனிக்க வேண்டும், அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது!' என்று நந்தகோபன் என்பவரைத் தலைவராக்கிய கூத்தும் அதற்குள் நடந்துவிட்டது.

ராஜபக்ஷே அமைச்சரவையில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைச்சர்கள் இருந்தாலும், வட கிழக்கைச் சேர்ந்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான். அடிக்கடி தமிழகம் வந்து போகக்கூடியவர். பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நிரந்தரமாகத் தங்கியிருந்தவர். ஆட்டோக்காரரிடம் கோபப்பட்டு துப்பாக்கி எடுத்துச் சுட்டதில் பிரபலமானவர். அதாவது டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகிய மூவரும் ராஜபக்ஷேவை ஆதரித்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதை வைத்தே இவர்களைத் தன் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் பக்ஷே. விரைவில் கருணாவும் அமைச்சராக்கப்படலாம் என்று தகவல்.

தினந்தோறும் உறுமும் புத்த பிட்சுக்களைச் சமாளிப்பதிலும் அலறும் சிங்கள கட்சிகளுக்குப் பதில் சொல்வதிலும் ராஜபக்ஷேவின் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ சண்டைச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தால்தான் இவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார் ராஜபக்ஷே.

இன்னொரு பக்கம், தமிழர்களைச் சமாதானப்படுத்த அலரி மாளிகையில் வேட்டி கட்டி பொங்கல் வைக்கிறார். ஐ.நா. சபைக்குப் போய் தமிழில் பேசுகிறார். இதனால் எல்லாம் தமிழர்களைச் சமாதானப்படுத்திவிட முடியுமா என்ன?

அழுகையே ஈழவன் மொழியானது. அவன் மனமே கோபம் பொங்கும் குகையானது!

Thursday, November 20, 2008

பிரபாகரனின் மனநிலை! களம் கண்டவரின் ஸ்பெஷல் பேட்டி! --நக்கீரன்


இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன்.
வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம்,

கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. இந்த சூழலில், கிளிநொச்சிக்குள் சென்று களம் கண்டு வந்துள்ளனர் சந்திரகாந்தனும் மற்றொரு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும். பிரபாகரனையும் இவர்கள் சந்தித்ததாய் வந்துள்ள தகவல்களை அறிந்து, சந்திரகாந்தனை தொடர்பு கொண்டோம். அவர், நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

வன்னிப் பெருநிலப்பரப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

தமிழினத்தை அழிக்கும் அகோரத் தாக்குதலை நடத்தி வருகிறது சிங்கள ராணுவம். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, வடகிழக்கில் உள்ளவர்கள் (தமிழர்கள்) எல்லாம் பயங்கரவாதிகள், மற்றவர்கள் எல்லாம் யுத்த ஜீவிகள் என்கிற மனோ நிலையில், ஒரு இனத்தை அழிக்கும் போரை நடத்துகிறார்.

நாங்கள் கண்ணால் பார்த்தோம். தமிழர்களின் வாழ்விடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி பாடசாலைகள், மருத்துவக் கூடங்கள், வியாபார ஸ்தலங்கள் என அனைத்தும் மூர்க்கத்தனமாக அழிக்கப்பட்டுள்ளன. குண்டுவீச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள காடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் மக்கள். மரங்களுக்கிடையே டெண்ட் போட்டு தங்கியுள்ளனர்.

உணவு இல்லை, மாற்று உடை இல்லை, மருந்து கிடையாது, ஏன் குடிக்க தண்ணீர் கூட இல்லை. குண்டுவீச்சில் நஞ்சாக மாறிக் கிடக்கிறதய்யா... குளம், குட்டைகள் எல்லாம். வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, கடும் காய்ச்சல் என சொல்லொணா துயரத்தில் தவிக்கின்றன பச்சிளங் குழந்தைகள். விஷ ஜந்துக்களோடுதான் வாழ வேண்டியதிருக்கிறது.

அழக் கூட நேரமில்லாமல், சிங்கள ராணுவத்தின் தாக்குதலில் செத்து மடியும் தங்கள் உறவுகளை, குழந்தைகளை அவசர கதியில் புதைத்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடிக் கொண் டேயிருக்கின்றனர் எமது மக்கள். எங்கு பார்த்தாலும் சோகமே சூழ்ந்திருக்கிறது. ஆனாலும், விரைவில் தீர்வு கிட்டும் என்கிற தன்னம்பிக்கை மட்டும் எமது மக்களிடம் ஆழமாக எதிரொலிக்கிறதய்யா.

"புலிகளின் முக்கிய பகுதியான பூநகரியைப் பிடித்துவிட்டோம். விரைவில் கிளிநொச்சியை வீழ்த்தி விடுவோம்'' என்கிறார் அதிபர் ராஜபக்சே. பூநகரி இழப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? கிளிநொச்சியை வீழ்த்தி விட சாத்தியம் உண்டா?

ராஜபக்சே என்ன மாதிரியான கால்குலேட்டர் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதில் எந்த மாதிரி கணக்குகளைப் போட்டு, "கிளிநொச்சியை பிடித்து விடுவோம்' என்று சொல்கிறார் எனவும் புரியவில்லை. கிளிநொச்சியை வீழ்த்தி விடுவோம் என்று ஓராயிரம் முறை சொல்லிவிட்டார். ஒருமுறை கூட அது நிறைவேறவில்லை. புலிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது கிளிநொச்சி. இதனைப் பிடிப்பதற்காக, மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது ராணுவம். அதனை முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள்.

நான் நேரில் பார்த்த வரையில் வலிந்த தாக்குதலை (தற்காப்பு) மட்டுமே தற்போது நடத்துகின்றனர் புலிகள். இதற்கே தாக்குப் பிடிக்க முடியாமல்தான் திணறுகிறது ராணுவம். ஆனால், உக்கிரமான தாக்குதல், முன்னேறி விட்டது என்றெல்லாம் பரப்புரை செய்கிறது சிங்கள அரசு. உக்கிரமான தாக்குதலை நடத்துகிறார்கள், உண்மைதான். ஆனால், அவர்கள் முன்னேறவில்லை. கடந்த 2 மாதங் களில் இவர்கள் நடத்திய உக்கிரமான தாக்குதல்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமானால், ஒரு கிளிநொச்சி அல்ல, 10 கிளிநொச்சியை பிடித்திருக்க வேண்டுமே. ஏன் முடியவில்லை.

பூநகரி என்பது ஒரு ஆட்லெரிதளம். அங்கு போராளிகள் யாரும் இல்லை. சண்டையே நடக்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது ராணுவம். அவ்வளவுதான். மாவீரன் நெப்போலியன் வரலாற்றில் கூட தந்திரோபதாய நடவடிக்கையாக பின்வாங்குவதும், பின்னர் அதனை மீட்பதும் நடந்துள்ளது. அத்தகைய போர் யுக்தியாகத்தான் பூநகரியை புலிகள் விட்டுக் கொடுத்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம். எமது மக்களிடமும் இந்த சிந்தனையோட்டம்தான் உள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்தாக செய்திகள். தற்போதைய கள சூழலில் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?

கிளிநொச்சி மற்றும் தமிழ்ப் பிரதேசங்களுக்குள் போய் வந்தோம். அங்குள்ள கள நிலைமைகளை கண்டறிந்தோம். ஓமந்தை செக்-போஸ்ட்டினை கடந்து தான் நாங்கள் கிளிநொச்சிக்குள் போக வேண்டும். ஆனால், ஆர்மி எங்களைத் தடுத்தது. கெடுபிடி செய்தது. "நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்' என்று சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளக் கூட சிங்கள ராணுவத்தினர் தயாராக இல்லை. நாங்கள் உள்ளே செல்லவே போராட வேண்டியதிருந்தது. கேமரா, உடைமைகளை தடை செய்தனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதாக இருந்தது. ஆனால், வாய்ப்பு அமையவில்லை. பிரபாகரனை அடிக்கடி சந்திக்கும் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் முக்கிய தளபதிகளை சந்தித்து நிலவரத்தையும் பிரபாகரன் மன நிலையையும் கேட்டோம். அப்போது அவர்கள் தற்போதைய களச்சூழல் எந்த வகையிலும் பிரபாகரனை சோர்வடைய வைக்கவில்லை. தன்னம்பிக்கையின் உச்சத்திலும் மன உறுதியுடன் திடமாகவும் இருக்கிறார். தந்திரங்கள், யுக்திகள் உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விவகாரங்களில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்.

அதே சமயம், தமிழீழத் தமிழர்களை கண் மூடித்தனமாக ராணுவம் படுகொலை செய்கிறதே என்கிற கவலையை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். கிளிநொச்சியை பாதுகாக்க சபதம் ஏற்றிருக்கிறார் பிரபாகரன் என்று சொன்னார்கள்.

ஆயுதங்களை கீழே போட்டால்தான் பேச்சுவார்த்தை என்கிறாரே ராஜபக்சே?

அறப்போராக துவங்கிய தமிழின சிக்கல்கள், ஆயுதப் போராட்டமாக உருமாறியதற்கு சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகள்தான் காரணம். தமிழர்களுக்கு சிங்களவனும் சிங்கள அரசும் பயப்படுவதில்லை. அவர்கள் கைகளில் உள்ள ஆயுதத்திற்குத்தான் பயப்படுகிறார்கள். ஆயுதங்கள் இருக்கும் போதே, தமிழர்களை கொன்றழிக்கும் ராஜபக்சே, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால்...?

தமிழர்களின் பாதுகாப்பே ஆயுதங்கள் தான். சிங்கள அரசை நம்பி ஆயுதங்களை கீழே போட ஒரு தமிழன் கூட ஒப்புக் கொள்ள மாட்டான்.

நன்றி: நக்கீரன்

Monday, November 17, 2008

Sunday, November 16, 2008


Saturday, November 15, 2008

கிழக்கில் நடப்பது என்ன ?? யார் இந்த நந்தகோபன்


கிழக்குத் தேசியம் பேசிக் கொண்டு கருணா விடுதலைப் புலிகளிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது அந்த துரோகியை நம்பி

கிழக்கின் பல்கலைக்கழகப் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் சிலர், மற்றும் புலம் பெயர்ந்து நாடுகளில் வசித்து வந்த சிலரும் கருணாவுடன் இணைந்து கொண்டனர்.

அவ்வாறு இணைந்து கொண்டவர்களுள் பிரான்ஸில் இருந்து வந்து இணைந்து கொண்ட ஸ்ராலின் எனப்படும் ஞானம், அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து இணைந்து கொண்ட ரகு எனப்படும் நந்தகோபன் ஆகியோர் முக்கியமானவர்கள்.


இவர்களில் ஞானம் பின்னர் பிள்ளையானின் ஆலோசகராகிவிட நந்தகோபாலன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்பட்ட போது அதன் தலைவரானார்.


இந்தக் காலப்பகுதியில் தான் கருணா இங்கிலாந்துக்குச் சென்றதும் போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதுமான சம்பவங்கள் இடம் பெற்றன.


கருணா அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இலங்கைக்குத் திரும்ப வருகிறபோது, கிழக்கைத் தாம் கைப்பற்றியது மட்டுமல்ல அங்கு தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்றது எனக்காட்ட வடக்கை கிழக்கிலிருந்து பிரித்து ஒரு தேர்தலை நடாத்தி பிள்ளையான் எனப்படுகின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சராகவும் ஆக்கி விட்டிருந்தது இலங்கை அரசு.


இந்தத் தேர்தல் காலம் பிள்ளையான் குழுவிற்கு ஒரு நெருக்கடியான காலகட்டமாக இருந்தது. வடக்கு கிழக்கைப் பிரித்தாயிற்று. புலிகளையும் கிழக்கிலிருந்து ஓரளவு அகற்றிய பின்னர்,, அரசாங்கம் சொன்னது போலவோ அல்லது இவர்கள் நினைத்தது போலவோ கிழக்கில் பாலாறோ தேனாறோ ஓடவில்லை. அம்பாறையிலோ திருமலையிலோ ஏன் மட்டக்களப்பிலோ கூட தமிழ் மக்களாகட்டும் அல்லது முஸ்லிம் மக்களாகட்டும் அவர்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிட்டவில்லை. அவர்களுடைய காணி அதிகாரம் பற்றிய பிரச்சினை பெரியளவில் கிளம்பியது.


கிழக்கின் பிரதிநிதிகளாக தம்மை உருவகித்துக் கொண்டவர்களுக்கு மக்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவி;ல்லை. இதன்போது தான் ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறியிருந்த அதன் ஆலோசகராக இருந்த விக்னேஸ்வரனுடைய தொடர்பு பிள்ளையானுக்கு ஏற்படுகிறது.


டக்ளஸின் தம்பி தயா வெளிநாட்டிலிருந்து வந்து ஈபி.டிபின் நிர்வாகம், வரவு செலவு, வியாபாரம் ஆகியவற்றை மெல்ல மெல்லக் கையேற்க அதன் பழைய உறுப்பினர்களதும் முக்கியஸ்தர்களாக இருந்தவர்களதும் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. அவ்வாறு முக்கியத்துவமிழந்த ஈபிடிபியை விட்டுக் கழன்றவர்கள் பலர். அவர்களில் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்கவர்.


இந்தக்காலப்பகுதியில்தான் விக்னேஸ்வரன் - பிள்ளையான் தொடர்பு வலுப்பட ஆரம்பிக்கிறது. பிள்ளையானுக்கு அவரது கட்சிக்கு இருந்த அரசியல் வெற்றிடத்தை விக்னேஸ்வரன் இட்டு நிரப்ப ஆரம்பிக்கிறார். அதுவரை கருணாவைப் போல கிழக்கின் அபிவிருத்திக்குத் தான் முதலிடம் என்று பேசி வந்த பிள்ளையான் அந்த அபிவிருத்தியில் ஒரு துரும்பளவேனும் செய்வதற்கு குறைந்த பட்சம் மாகாண சபைக்கான அதிகாரங்களாவது வேண்டும் என்று பேசத் தொடங்குகிறார்.


பிள்ளையானின் இந்தப் போக்கு மகிந்த அரசுக்கு உவப்பானதாகவிருக்கவில்லை. இதேகாலப்பகுதியில் இந்திய அரசியல் தலைவர்களுடனும் அவர்களை இயக்கும் பின் புலங்களுடனும் பிள்ளையான் நெருங்க முயற்சிக்கும் தகவல்கள் மகிந்த அரசுக்கு இன்னும் தலையிடியை ஏற்படுத்தியது.


இதன் காரணமாக மீண்டும் மகிந்த அரசால் களமிறக்கப்பட்ட கருணா மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவையில்லை எனவும், காவற்துறை அதிகாரம் கூட மாகாணசபைக்கு அவசியமற்றதெனவும் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிறிலங்காவின் காவற்துறைப்; படையில் இணைக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையிடுகிறார். அது மட்டுமல்லாமல் கட்சியினது பெயரையும் சின்னத்தினையும் மாற்றப் போவதாகவும் தெரிவிக்கிறார்.


இந்த மோதல் படிப்படியாக விரிவடைய கட்சியின் பெயரைப் பதிவு செய்த குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவிக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானாவோ கருணாவை கட்சியிலிருந்தே இடைநிறுத்தியதாக அறிவிக்கிறார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல புலிகளிலிருந்து கருணாவை உடைத்து தமிழ் மக்களின் அரசியலதிகாரக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தி விடலாம் என்று நினைத்தபோது உடைந்து வந்த பிள்ளையான் குழுவோ மீண்டும் மாகாணசபைக்கான அதிகாரங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறது.

இது மகிந்த அரசாங்கத்திற்கு எரிச்சலைக் கிளப்பி விட்டுள்ளது.
மகிந்தவின் தந்திரோபாயங்களுள் ஒன்று புலிகளிலிருந்து உடைந்து வந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கையாள்வது. மகிந்தவுக்கு கருணாவுடனும் தொடர்பிருக்கிறது. பிள்ளையானுடனும் தொடர்பிருக்கிறது. இனியபாரதியுடனும் தொடர்பிருக்கிறது. ஆனால் கருணாவின் கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் யாரும் இல்லை.


பிள்ளையான் தரப்பிலிருந்து எழுந்த மாகாணங்களுக்கான அதிகாரக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தத் தான் கருணா அவசரஅவசரமாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். கருணா விசுவாசிகளோ வேறெவருமோ நம்புவது போல கிழக்கு அபிவிருத்திக்காகவல்ல. அதன் நன்றிக்கடனாக கருணா மாகாண அதிகாரமே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார்.
ஆக, பிள்ளையான் குழுவைப் பலவீனப்படுத்துவதும் கருணாவைப் பலப்படுத்துவதும் மட்டுமே இப்போதைக்கு மகிந்த அரசுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்க உள்ளஒரே வழி.

அதற்கு முதல்படியாக புலனாய்வுத் துறை ஊடகங்களுடாக ஒரு செய்தியைக் கசிய விட்டது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுள் ஊடுருவி விட்டார்கள். ஊடுருவியது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் அவர்கள் கொழும்பு வரை வந்து செல்கிறார்கள். இது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று.


அதன் அடுத்த கட்டமாக இன்று குமாரசாமி நந்தகோபன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்று பிரச்சாரப்படுத்தி விடலாம். உறுப்பினர்கள் மத்தியில் கருணாவை எதிர்ப்போருக்கு அதாவது மாகாண சபை அதிகாரங்கள் என்று பேசுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக்கி விடலாம். ஓரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

ஆக மொத்தத்தில், இந்த கொலைகளின் பின்னனியில் அரசாங்கமே உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகின்ற போதும் , பிரதேசவாதம் பேசி புலிகள் இயக்கத்தை உடைத்து, மகிந்தவின் கைகளை ஓங்க வைக்கும் கருணாவிற்கும் நந்தகோபன் நிலைதான் வரும். அரசாங்கத்தின் சொல்கேட்டு ஆடாமல் , கூடுதல் அதிகாரம் மாகாண சபைக்கு தேவை என்றால் இதே கெதிதான் பிள்ளையானுக்கும் என்பதை மகிந்த BROS நிறுவனம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்..

Saturday, November 08, 2008

விரைவாக எப்படி சப்பாத்து லேஸ் கட்டுவது?

எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை.

தாமஸ் ஆல்வா எடிசன்


தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.
பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.
வெஸ்டிங்ஹவுஸ்
“பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது” என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.

ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து-காணொளி



Wednesday, November 05, 2008

யார் இந்த பராக் ஒபாமா? -நாளைய அமெரிக்கா ஜனாதிபதி !!


வாழ்க்கை வரலாறு

ஹொனலுலுவில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதலாக சந்தித்த கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியர், கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹமுக்கு பிறந்தார் பராக் ஒபாமா.

இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்[2]. பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார்.

ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து 1982இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார்.

தாயார் ஆன் டன்ஹம் 1995இல் சூலகப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2008இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்.

உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

நியூயார்க் நகரிலேயே இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்

நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன
1988இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார்[6].

இதனால் 1991இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார்[7]

இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001)

குடும்பமும் வாழக்கையும்

1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர். அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார்[

இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்[49]. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர்[50]. தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர்.

இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார்[52]. 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது[53].

உயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்[54]. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார்

ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார்

ஈழம்-கருணாநிதி கேலிச் சித்திரம்

Sunday, November 02, 2008

ஒரு புன்னகைப் பூவின் ஓராண்டு நிறைவு

தமிழீழத்தின் புன்னகைப் பூவாகத் திகழ்ந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் மறைந்து இன்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகச் சேர்ந்து கோட்டப் பொறுப்பாளர், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்ட சுப.தமிழ்ச்செல்வன் 1993ம் ஆண்டில் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவியேற்றவர். 1994-1995 இல் சந்திரிக்கா அரசுடனான அமைதிப் பேச்சில் விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலைமை வகித்தார். 2002 உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களில் பங்குபற்றினார்.

தாய்லாந்து, சுவிர்ஸர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜேர்மனி உட்பட பல நாடுகளுக்குச் சென்று தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைத்தவர். ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு இவரே தலைமை வகித்தார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பதின்நான்கு வருடங்கள் பணிபுரிந்த இவர், சிறீலங்கா அரசாங்கத்தின் போர் வெறிக்கு இரையாகி இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இவரது முதலாவது நினைவு நாள் இன்றாகும். தாயகத்தில் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் இவரதும் இவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளினதும் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

தென் இந்திய நடிகர் சங்கம்

mansoor alikan speech