
அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சியடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள்,
இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு அவலம் என்று என்ன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தவாறு எதிர்வரும் 27ஆம் திகதி புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறார்.
புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிலையையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது.
பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்த்துகின்ற உரை புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்க உரையாக அமைவது வழக் கம். அதாவது கடந்த வருட நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்த கருத்துக்களும் அடுத்த வருடத்துக்கான கொள்கைப் பிரகடனமாகவும் இந்த உரை அமைவதுண்டு.
இந்தியப் படைகளின் காலத்தில் புலிகள் சந்தித்த நெருக்கடிக்குப் பின்னர் நிலங்களைத் தக்கவைப்பதில் பெரும் நெருக்க டிகளை எதிர்நோக்கியிருக்கின்ற தருணத்தில் இந்த வருட உரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இடங்களில் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை சுடரேற்ற முடியாத நிலை. இவை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன.
இப்போது கிளிநொச்சியின் கனகபுரம், விசுவமடு, முல்லைத்தீவின் முள்ளியவளை, யாழ்ப்பாணத்தின் உடுத்துறை மற்றும் மணலாறின் சில கல்லறைத் தோட்டங்கள் மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தான் மாவீரர் நாளில் சுடரேற்றும் நிகழ்வு நடைபெறப் போகிறது.
இந்த முக்கியமான கால கட்டத்தில் பிரபாகரனின் உரை முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்படுகிற அதேவேளை அந்த உரையை எவ்வாறு நிகழ்த்துவதென்ற நெருக்கடி அவருக்கு இருக்கவே செய்யும்.
கடந்த வருட உரையில் இலங்கை அரசாங்கத்தின் போர் வெறிக் கொள்கைக்கு சர்வதேசமே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டியிருந்த பிரபாகரன், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் தார்மீக நியாயத்தைப் புரிந்து கொண்டு சர்வதேசம் அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் சர்வதேசத்தின் காதில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ பெயருக்கு அவ்வப்போது இணைத்தலைமை நாடுகள் என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டங்கள் இராணுவத்தீர்வு சாத்தியமற்றதென்ற வழக்கமான ஆலோசனையோடு முடிந்து போனதே தவிர, இப்போது இலங்கைப் போரை மேற்குலக நாடுகள் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் இந்தப் போர் தொடர்பாக பிரபாகரன் எடுக்கப் போகின்ற முடிவு என்ன என்ற கேள்வி எழுகிறது ? இதற் கான பதில் பலரினதும் எதிர்பார்ப்புக்குரிய விடயமாகியிருக்கிறது.
இந்தப் போர் நீண்டு செல்லுமா? தொடர்ச்சியாக நிலங்களை இழந்து வந்திருக்கின்ற புலிகள் இயக்கத்தின் நிலை எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருக்கும்? புலிகள் இயக்கம் எதற்காக இன்னமும் தற்காப்பு நிலையிலேயே இருக்கிறது? தாக்குதல் நிலையில் இருந்து செயற்படக் கூடிய பலம் புலிகளிடம் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு இந்த வருட மாவீரர் தின உரையில் பதில் கிடைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.
தற்காப்பு நிலையில் தான் இருக்கிறோம் என்று தொடர்ச்சியாகப் புலிகள் கூறி வந்திருக்கின்ற நிலையில் அவர்களின் ஆளுகைப் பரப்பு சுருங்கிப் போயிருக்கிறது.
இது புலிகளின் பலத்தின் மீதான கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.
புலிகள் பலம் குறைந்து போகவில்லை என்பது வேறு விடயமாக இருப்பினும்
சாதாரண மக்களின் பார்வையில் புலிகளின் பலம் குறித்த சந்தேகம் கேள்வி எழுந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்தக் கட்டத்தில் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் தின உரையானது புலிகள் இயக்கத்தின் பலத்தை அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமையும் என்றே எதிர்பார்க்கலாம்.
அதேவேளை சர்வதேசத்தின் நெருக்குதல் காரணமாகவே புலிகள் இயக்கம் தற்காப்பு நிலையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாகவும் இந்த வருட மாவீரர் தின உரை போர்ப் பிரகடனத்தை வெளியிடும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்புக்கள் சிலரிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், புலிகளின் இந்த நீண்ட விட்டுக் கொடுப்பு அல்லது பின்வாங்கலுக்கு தந்திரோபாய பின்நகர்வு என்ற வார்த்தை பொருத்தமானதாக இருக்கும் என்று சாதாரண மக்கள் நம்பும் நிலையில் இல்லை.
எனவே போர்ரின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஓர் உரையை, அடுத்த கட்டத்தில் புலிகள் இயக்கம் என்ன செய்யப் போகிறதென்ற விளக்கத்தையே பலரும் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளை இந்த உரையில் முக்கியமாக சர்வதேசத்தை நோக்கி தெளிவான சில முடிவுகளை புலிகள் அறிவிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
சர்வதேசத்தின் விருப்பு வெறுப்புகளுக்காக இழந்தது போதும் என்ற தொனிப்பட இந்த வருட உரையில் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெ?கிறது.
போரை நிறுத்துவதில் இலங்கை அரவைழிக்குக் கொண்டு வருவதில் அல்லது இலங்கை மீதான கண்டிப்பான நடவடிக்கை எடுப்பதில் சர்வதேசம் தவறிப் போயிருப்பதை பிரபாகரன் தனது உரையில் முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேசத்தின் நிலைப்பாடுகள், அணுகுமுறைகளில் காணப்படும் தொய்வான தன்மையே இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராணுவப் போக்குக்கு காரணம் என்று புலிகள் உறுதியாக நம்புகின்றனர். எனவே அவர்கள் தமது கண்டனத்தை சர்வதேசத்தை நோக்கியும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி தொடர்பாக நன்றிபூர்வமான கருத்துகளை வெளியிடுவதுடன் நின்றுவிடாது இத்தகைய ஆதரவை பிரபாகரன் தொடர்ந்து வழங்குமாறு வேண்டி நிற்பதாகவும் அவரது உரை அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது கொளுந்து விட்டெரியும் ஈழத்தமிழர் ஆதரவுப் பிரச்சினையை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் புலிகளின் தீர்க்கமாஞீ கருத்துக்கள் இந்த மாவீரர் தினத்தில் வெளியாகலாம்.
இவற்றோடு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது முக்கியமான தேவையாகவும் பிரபாகரனுக்கு இருக்கிறது.
ஏனென்றால் அவர்களின் நிதிப்பங்களிப்பு புலிகளின் இயக்கத்தின் உயிர்வாழ்வுக்கு முக்கியமானது.
இன்றைய நிலையில் நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் தமிழ்மக்கள் மத்தியில் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை மிகவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லை விடவும் செயலில் வேகம் காட்டுபவர் பிரபாகரன். ஆகையால் இன்றைய நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அவர் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டிருப்பாரா என்ற சந்தேகமும் உள்ளது.
ஆனால், சொல்லிலோ செயலிலோ இந்தக் கேள்விகளுக்கு தமிழ்மக்கள் விடை தேடிக் கொண்டிருப்பது உண்மை.
அதேவேளை சர்வதேசம் புலிகளின் நிலைப்பாடுகளை அறிய ஆசைப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்து பேச்சு நடத்த வருமாறு விடுத்து வரும் அழைப்புகளின் பின்னணியில் புலிகளின் நிலைப்பாட்டை அறிய சர்வதேசம் ஆசைப்படுகிறது. இதற்கான பதில் பிரபாகரனின் உரையில் நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனவே தான் கடந்த காலங்களை விடவும் இம்?றை மாவீரர் தின உரை கனதியானதாக இருக்கும் என்பது பொதுவான கணிப்பு.
No comments:
Post a Comment