தமிழீழத்தின் புன்னகைப் பூவாகத் திகழ்ந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் மறைந்து இன்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகச் சேர்ந்து கோட்டப் பொறுப்பாளர், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்ட சுப.தமிழ்ச்செல்வன் 1993ம் ஆண்டில் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவியேற்றவர். 1994-1995 இல் சந்திரிக்கா அரசுடனான அமைதிப் பேச்சில் விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலைமை வகித்தார். 2002 உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களில் பங்குபற்றினார்.தாய்லாந்து, சுவிர்ஸர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜேர்மனி உட்பட பல நாடுகளுக்குச் சென்று தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைத்தவர். ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு இவரே தலைமை வகித்தார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பதின்நான்கு வருடங்கள் பணிபுரிந்த இவர், சிறீலங்கா அரசாங்கத்தின் போர் வெறிக்கு இரையாகி இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இவரது முதலாவது நினைவு நாள் இன்றாகும். தாயகத்தில் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் இவரதும் இவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளினதும் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment