Thursday, April 26, 2007

இலங்கைக்கே உலகக் கிண்ணம் சோதிடர்கள் அடித்துக் கூறுகின்றனர்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவது உறுதி என்கின்றனர் இலங்கை சோதிடர்கள்.
இந்தியாவைப் போலவே இலங்கையிலும் சோதிடப் பித்து அதிகம். "சோதிடம்தனை இகழ்" என்றார் பாரதியார், "ஆனால், பார்க்காதே" என்று சொல்லவில்லை. எமக்குச் சாதகமாக சோதிடர் கூறினால் உற்சாகமாக இருப்போம். இல்லாவிட்டால், "இதையெல்லாம் நம்புவார்களா?" என்று பகுத்தறிவோடு கேட்டுவிட்டு வேலையைப் பார்ப்போம்.

இப்போது விடயத்துக்கு வருவோம். இலங்கைக்குத்தான் கிண்ணம் என்று அரிசேன் அஹுபுடு, பிரியந்த ரத்னாயக்க என்று இரண்டு சோதிடர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

`இலங்கைக்கு கிண்ணம் உறுதியானால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு "உரிய நேரத்தில்" இலங்கை அணி ஹோட்டலைவிட்டு புறப்படுவதுதான் முக்கியம்' என்றார் அரிசேன் அஹுபுடு.

அப்படி புறப்பட்டிருப்பார்களா என்பது அரையிறுதிச் சுற்றின் முடிவிலும் அதன் பிறகு இலங்கை வெற்றி பெற்றால் இறுதிச் சுற்று ஆட்ட முடிவிலும் தெரிந்து விடுமென்றார்.

பிரியந்த ரத்னாயக்க நிபந்தனை ஏதும் போடாமல் இலங்கையின் வெற்றி உறுதி என்பதற்கு ஏற்கும்படியான காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறார்.

தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியாவுக்கு இப்போது நல்ல யோக திசையாம். எனவே, அவரும் சாதனை படைத்து அணியும் சாதனை படைப்பது உறுதியென்கிறார்.

No comments: