
பிராந்தியில் தூக்கமாத்திரை கலந்து பயங்கரம்
மருந்து கடை அதிபர் கைது
சென்னை, ஏப்.7&
சென்னையில் சினிமா துணை நடிகை ரீனா பிராந்தியில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதையட்டி மருந்து கடை அதிபர் கைதானார். போலீசில் அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
துணை நடிகை ரீனா
சென்னை, வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரீனா (வயது 35). திருமணமான இவர் கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். பின்னர், தேவநேசம் என்பவரை 2&வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ரீனாவுக்கு ஒரு மகள் உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துடன் படையப்பா, நடிகர் விஜய்யுடன் யூத் உட்பட 20&க்கும் மேற்பட்ட சினிமாவில் நடனக் காட்சிகளில் ரீனா நடித்துள்ளார். பெரும்பாலான நாட்கள் அவர் சினிமா சூட்டிங் முடிந்து நள்ளிரவில்தான் வீடு திரும்புவார். ரீனாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மது குடித்தும் தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரையும் சாப்பிடுவார்.
கள்ளக்காதல்
ரீனா விருகம்பாக்கத்தில் உதயராஜன் (23) என்பவருக்கு சொந்தமான மருந்துக் கடையில்தான் தினமும் தூக்க மாத்திரை வாங்குவார். அப்போது உதயராஜனுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. மருந்துக் கடையிலேயே இரவு சந்தித்து உல்லாசமாக இருப்பார்கள். சினிமா சூட்டிங் முடிந்து நேரமாகி விட்டால், உதயராஜன் மருந்து கடையிலே ரீனா தங்கி விடுவார். கடை கதவை மூடிவிட்டு அங்கு 2 பேரும் விடிய விடிய மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மருந்து கடைக்கு ரீனா வந்தார். அங்கு உதயராஜுடன் மது மயக்கத்தில் பேசி கொண்டிருந்தார். இரவு இருவரும் அங்கேயே படுத்து விட்டார்கள்.
உதயராஜன் நேற்று அதிகாலை 3 மணிக்கு கண் விழித்தார். அருகில் படுத்திருந்த ரீனாவை எழுப்பினார். நீண்ட நேரமாக எழுப்பியும் ரீனா எழுந்திருக்கவில்லை. எனவே, அவருடைய மூக்கின் அருகே கையை வைத்து, மூச்சு வருகிறதா? என்று பார்த்தார். மூச்சு வரவில்லை என்று தெரிந்ததும் உதயராஜன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு ரீனா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. உடனே உதயராஜன் பதட்டம் அடைந்தார்.
போலீசார் விசாரணை
ரீனாவின் மரணம் பற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு உதயராஜன் புகார் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் பாஸ்கர் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சேது, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்& இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ரீனாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை ரீனா மர்மமான முறையில் மருந்து கடையில் இறந்து கிடந்தது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மருந்து கடை அதிபர் உதயராஜனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ரீனாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்தது சட்டரீதியாக குற்றமாகும்.
பிரேத பரிசோதனை
ரீனாவின் பிரேதத்தை பரிசோதித்து பார்த்துவிட்டு, ÔÔஅவரது நுரையீரல் மதுவின் தாக்குதலால் பெரிய அளவில் சிதைந்து இருந்ததாகவும், மது மயக்கத்தில் இருந்த ரீனாவுடன் உதயராஜன் உடலுறவு கொண்டதால்தான் ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் இறந்திருக்கிறார்ÕÕ என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.
இதையட்டி, போலீசார் உதயராஜனிடம் விசாரித்த போது அவர், மது மயக்கத்தில் இருந்த ரீனாவுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டார். ரீனா சுயநினைவு இல்லாமல் இருந்த போது அவரோடு உடலுறவு வைத்தது கற்பழிப்பு குற்றமாகும். இதனால் ரீனாவின் சாவுக்கும் உதயராஜன் காரணமாகி விடுகிறார். சாவுக்கு காரணமானதால் மறைமுகமாக உதயராஜன் கொலைகுற்றவாளி ஆகிறார். டாக்டர் அனுமதி இல்லாமல் தூக்கமாத்திரை கொடுத்தது ஒரு குற்றம், சுயநினைவு இல்லாத பெண்ணிடம் உடலுறவு கொண்டது கற்பழிப்பு குற்றம். இதன் மூலம் சாவுக்கு காரணமாக இருந்தது கொலைக்குற்றம். இப்படி 3 வகையான குற்றப்பழிகள் உதயராஜன் மீது விழுந்தது. இதன் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
போலீசில் உதயராஜன் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:&
எனது சொந்த ஊர் கமுதி அருகே உள்ள பேரையூர் ஆகும். பாலிடெக்னிக் படித்துள்ள நான் வேலை இல்லாமல் இருந்தேன். எனது அக்காள் சாந்தி டாக்டராவார். சென்னை போரூரிலும், விருகம்பாக்கத்திலும் அவர் கிளினிக் வைத்துள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள கிளினிக்கை ஒட்டி எனது அக்காள் எனக்கு மருந்து கடை வைத்துக் கொடுத்தார். நான் மருந்து கடையையும், கிளினிக்கையும் கவனித்து வந்தேன்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரீனா எனது கடைக்கு இரவு நேரத்தில் பதட்டத்தோடு வந்தார். தூக்க மாத்திரை வேண்டும் என்று கேட்டார். நான் டாக்டர் பரிந்துரை சீட்டு இருந்தால்தான் தருவேன் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. எப்படியாவது தூக்கமாத்திரை கொடுங்கள் என்று கெஞ்சினார். நான் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறினேன். உடனே அவர் எனக்கு காம வலை விரித்தார். எனக்கும், அவருக்கும் 10 வயது வித்தியாசம். அவருடைய மயக்கும் பார்வையில் நான் என்னை இழந்தேன். தூக்கமாத்திரையை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்றும், எனது ஆஸ்பத்திரியிலேயே இரவு தங்கி இருந்து தூக்கமாத்திரையை போடுங்கள் என்றும் கூறினேன். அதற்கு ரீனா சம்மதித்தார்.
தூக்கமாத்திரைக்கு உல்லாசம்
நான் தூக்கமாத்திரை கொடுத்ததால், அதற்கு பரிசாக என்னிடம் உல்லாசமாக இருப்பதற்கு சம்மதித்தார். இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதே போல தினமும் எங்களுடைய செக்ஸ் விளையாட்டு நீடித்தது. உல்லாசத்துக்கு முன்பு இருவரும் மது சாப்பிடுவோம். அதன் பிறகு அவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரியிலே தூங்கிவிடுவார். காலையில் எழுந்து வீட்டுக்கு செல்வார். கடந்த 15 நாட்களாக எங்களுடைய இந்த உல்லாச வாழ்க்கை தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவு ரீனா திடீரென்று உல்லாசத்துக்கு மறுத்தார். மாத்திரையை கொடுங்கள் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அவசரப்பட்டார். ஆனால் நான் அவரை அனுபவிக்க துடித்துக் கொண்டிருந்தேன். மது அருந்தி விட்டாவது வீட்டுக்கு போங்கள் என்று கூறினேன். அதற்கு ரீனா சம்மதித்தார். இருவரும் மது அருந்தினோம்.
காமப்பசி
அவருக்கு தெரியாமல் மதுவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்தேன். மது மயக்கத்தில் அவர் சுயநினைவை இழந்தார். அதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ரீனாவுடன் என்னுடைய காமப்பசியை தணித்துக்கொண்டேன். 2 முறை செக்ஸ் உறவு கொண்டேன். பிறகு அசதி மிகுதியால் நான் தூங்கி விட்டேன். அதிகாலையில் திடீரென்று விழித்து பார்த்த போது, ரீனா இறந்து போனது எனக்கு தெரிய வந்தது. என்னுடைய அற்பத்தனமான, காம ஆசையால் ரீனாவின் சாவுக்கு காரணமாகிவிட்டேன். ரீனா மதுவுக்கு அடிமையாக இருந்ததால், அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது.
எனது அக்காள் சாந்தி ரீனாவை சோதித்து பார்த்துவிட்டு மது பழக்கத்தை விடாவிட்டால், உனது உயிருக்கு ஆபத்து என்று ஏற்கனவே ரீனாவை எச்சரித்து இருந்தார். அவரது எச்சரிக்கையையும் மீறி, ரீனா தினமும் மது அருந்தினார். ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கமாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் உடலுறவு கொண்டதால் ரீனா இறந்துவிட்டதாக சொல்லி போலீசார் என்னை கைது செய்து விட்டார்கள். நான் ரீனா இறந்து போவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இவ்வாறு உதயராஜன் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று உதயராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். போலீசார் விசாரித்த போது உதயராஜன் கதறி அழுதபடி இருந்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெற்றோர் பெண் பார்த்து வந்ததாகவும், அந்த நேரத்தில் அற்ப ஆசையால் இப்படி போலீசில் மாட்டிக் கொண்டேனே என்று உதயராஜன் அழுது புலம்பியபடி இருந்தார்.
No comments:
Post a Comment