
பட்டதாரி பெண்ணை மணக்கிறார்.நடிகர் ஸ்ரீகாந்துக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மணப்பெண், ´´எம்.பி.ஏ.´´ படித்த பட்டதாரி ஆவார். இவர்கள் திருமணம், அடுத்த மாதம் (ஜூன்), சென்னையில் நடக்கிறது.ஸ்ரீகாந்த்தமிழ் பட உலகில் உள்ள இளம் கதாநாயகர்களில் குறிப்பிடத்தக்கவர், ஸ்ரீகாந்த். இளம் ரசிகைகளின் கனவு நாயகர்களில் இவரும் ஒருவர். ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த், ´´ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மெர்க்குரி பூக்கள், ஜூட், பம்பரக்கண்ணாலே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகள் பெயர், வந்தனா. ´´எம்.பி.ஏ.´´ பட்டதாரி. சுவிட்சர்லாந்தில், ஓட்டல் மானேஜ்மெண்ட்டும் படித்து இருக்கிறார். இவர், துபாயில் தொழில் அதிபராக இருக்கும் சாரங்கபாணியின் மகள் ஆவார்.ஜூன் மாதம் நடக்கிறதுஸ்ரீகாந்த்&வந்தனா திருமணம், அடுத்த மாதம் (ஜூன்) சென்னையில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.திருமணம் செய்துகொள்வது பற்றி நடிகர் ஸ்ரீகாந்த், இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் நான் முடிவு செய்து இருந்தேன். இப்போது எனக்கு 27 வயது முடிந்து 28 வது வயது நடக்கிறது. இதுதான் எனக்கு திருமணம் செய்வதற்கு பொருத்தமான வயது என்று அம்மாவும், அப்பாவும் கருதுகிறார்கள்.அம்மா&அப்பா மனதை சந்தோஷப்படுத்துவது என் கடமை. திருமணம் என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு விஷயம். திருமணத்துக்குப்பின், என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.குடும்ப நண்பர்கள்நானும், மணப்பெண் வந்தனாவும் குடும்ப நண்பர்கள். வந்தனா, நிறைய படித்து இருக்கிறார். அழகானவர். நல்ல குணம்.நான் முன்பு மாதிரி அதிக படங்களை ஒப்புக்கொள்வதில்லை. சிறந்த கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். அப்படி தேர்வு செய்த படம்தான், ´´ம்´´ என்னை திரையுலகுக்கு அறிமுகம் செய்த டைரக்டர் சசிதான், இந்த படத்தை இயக்குகிறார்.அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் என்று நம்புகிறேன் இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
No comments:
Post a Comment