Wednesday, May 23, 2007

சண்டை காட்சியில் நடித்த போது நடிகர் ஜீவன் படுகாயம்

ஏணிப்படியில் நின்று சண்டை போட்டபோது, ஏணி சரிந்ததால் நடிகர் ஜீவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவருடைய காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது.Ôமச்சக்காரன் ´´காக்க காக்க´´ படத்தில் வில்லனாகவும், ´´திருட்டுப்பயலே´´ படத்தில் வில்லத்தனம் பொருந்திய கதாநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். இவர் கதாநாயகனாக நடித்த ´´நான் அவன் இல்லை´´ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து ஜீவன், ´´மச்சக்காரன்´´ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காம்னா நடிக்கிறார். தமிழ்வாணன் டைரக்டு செய்கிறார்.சண்டை காட்சிஇந்த படத்துக்காக, ஒரு போலீஸ் நிலையத்தில் சண்டை நடப்பது போன்ற காட்சி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள மணிமஹாலில் படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் அமைத்த இந்த சண்டை காட்சியில் ஜீவனுடன், 6 ஸ்டண்ட் நடிகர்கள் மோதினார்கள்.ஜீவன், ஒரு ஏணிப்படியில் ஏறி நின்றபடி, ஒரு ஸ்டண்ட் நடிகரை பின்னால் எட்டி உதைப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டார்கள். அந்த காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஏணிப்படி சரிந்தது. இதனால் ஜீவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.தலையில் அடிஅவருடைய இடது காலிலும், தலையிலும் பலத்த அடிபட்டது. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜீவனை, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவருடைய காலிலும், தலையிலும் ´´ஸ்கேன்´´ எடுத்து பார்க்கப்பட்டது. அதில், கோளாறு எதுவும் இல்லாததால், சிகிச்சைக்குப்பின் ஜீவன் வீடு திரும்பினார்.

No comments: