Tuesday, March 06, 2007

ரஜினிகாந்த் மாறுவேடத்தில் போய், ரசித்த படம்!

கர்நாடகாவில் 500 நாட்களுக்கு மேல் ஓடி, அதிரடி வெற்றியை குவித்த கன்னட படம், ´´ஜோகி´´ திரைக்கு வந்த சில நாட்களில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், படத்தின் கதையில் மனதை பறிகொடுத்து விட்டார். என்ன விலை கொடுத்தாவது இந்த கதையை வாங்கி, தானே நடிக்க முடிவு செய்தார்.அதற்குள் ´´சந்திரமுகி´´ படம் வந்ததால், ´´ஜோகி´´யில் அவரால் நடிக்க முடியவில்லை. இருப்பினும் ரஜினிகாந்த், ´´ஜோகி´´ படத்தின் கதையை விடுவதாக இல்லை. பட அதிபர் கேயாரிடம் ´´ஜோகி´´ படத்தை பற்றி சொல்லி, என்ன விலை கொடுத்தாவது இந்த கதையை வாங்கி விடுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார்.´´ஜோகி´´ படத்தை பல தடவை பார்த்தும் தாகம் அடங்காத ரஜினி, தியேட்டரில் ரசிகர்களுடன் பார்க்க விரும்பி, மாறுவேடத்தில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். அப்போது படம் பார்த்தவர்களை, அசைய விடாமல் கட்டிப்போட்ட விதத்தை பட அதிபர் கேயாரிடம் சொல்லி, அதிசயித்தார். அதைத்தொடர்ந்து கேயார், ´´ஜோகி´´ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கி, படத்துக்கு ´´பரட்டை என்கிற அழகுசுந்தரம்´´ என்று பெயர் சூட்டி, படப்பிடிப்பை உடனடியாக தொடங்கினார்.´´சிவாஜி´´ படத்தில் ரஜினிகாந்த் பல மாறுபட்ட தோற்றங்களில் நடிப்பதுபோல், ´´பரட்டை என்கிற அழகு சுந்தரம்´´ படத்தில் தனுஷ் பலவிதமான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். தனுஷ் ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து இருக்கிறார். ´´அம்மா´´ வேடத்தில், ´´ஊர்வசி´´ அர்ச்சனா நடித்து இருக்கிறார். நாசர், லிவிங்ஸ்டன், ரியாஸ்கான், சந்தானம், காதல் தண்டபாணி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை: யுவன்சங்கர்ராஜா, டைரக்ஷன்: சுரேஷ்கிருஷ்ணா.

No comments: