
ஜமைக்கா, மார்ச்.13&உலக கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.கிரிக்கெட் திருவிழா1975 ம் ஆண்டு முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த 9&வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முறைப்படி தொடங்கியது.தொடக்க விழா ஜமைக்காவில் உள்ள டிரெலாவ்னில் ஸ்டேடியத்தில் நடந்தது. இதையட்டி கண்கவர் கலை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல் என்று ஆர்ப்பரிப்பில் ஈடுபட்டனர். போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் பல நாடுகளை கொண்ட தீவாகும். அதில் உள்ள 9 நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. அந்த 9 நாடுகளின் பாரம்பரிய கலாசாரத்தை விளக்கும் விதத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அணிவகுப்புபாரம்பரிய இசை, மேற்கத்திய இசையுடன், இந்திப்பட பாடலும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன. கலை நிகழ்ச்சி மட்டும் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கிரிக்கெட் போட்டி குறித்து விசேஷ பாடலும் இசைக்கப்பட்டது.அதன் பின்னர் போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளும் ஆங்கில அகர வரிசைப்படி அணிவகுத்து வந்தன. 3 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்கள் முதலில் அணி வகுத்து வந்தனர். கடைசியாக போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி வந்தது. இந்திய அணி டிராவிட் தலைமையில் அணிவகுத்து வந்தது. அவர்களை வண்ண உடை அணிந்த வெஸ்ட் இண்டீஸ் சிறுவர்&சிறுமிகள் அழைத்து வந்தனர். எய்ட்ஸ் பாதிப்பை எதிர்க்கும் நோக்குடன் சிறுவர்கள் அணி வகுப்பில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு இருந்தது.47 நாள் திருவிழாவான இந்த போட்டியை இந்திய நேரப்படி அதிகாலை 5.42 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் உலக கோப்பை போட்டியை தொடங்கி வைப்பதாக அறிவித்தார். சோபர்ஸ் பேசுகையில் இந்த போட்டியை வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தொடங்கி வைப்பதில் மிகுந்த பெருமிதம் அடைகிறேன் என்று தெரிவித்தார்.வாணவேடிக்கைபோட்டியை தொடங்கி வைத்ததும் வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30 நிமிடங்கள் தொடர்ந்து அதிர் வேட்டுகள் முழங்கிய வண்ணம் இருந்தன. வானம் முழுக்க வண்ணமயமாக காட்சி அளித்தது.வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா வீரர்களுக்கான உறுதிமொழியை படித்தார். அதனை அனைத்து வீரர்களும் திரும்ப சொல்லி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். உத்வேக ஆட்டத்தை காணலாம்போட்டி தொடக்க விழாவையட்டி ஐ.சி.சி.தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடு விடுத்துள்ள அறிக்கையில், ´´கிரிக்கெட் ஆட்டம் உச்ச நிலையில் இருக்கும் இந்த கால கட்டத்தில் நடக்கும் இந்த உலக கோப்பை போட்டியில் வீரர்கள் அனைவரும் தங்கள் உத்வேகத்தை மீண்டும் காட்டுவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் ஆட்டம் மேலும் வலுப்பெறும். போட்டியை சிறப்பாக நடத்தும் வெஸ்ட் இண்டீசுக்கு பாராட்டுக்கள். உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் டெலிவிஷன் மூலம் சிறப்பான இந்த போட்டியை கண்டு களிப்பார்கள் என்று எண்ணுகிறேன்´´என்று கூறப்பட்டுள்ளது. தொடக்க விழாவை காட்சியை காண 10 ஆயிரம் பேர் மைதானத்தில் திரண்டு இருந்தனர்.
No comments:
Post a Comment