கின்னஸ் சாதனை முயற்சியாக உருவாகியுள்ள படம் "சாதனை". மாஸ்டர் கிஷன், ஜாக்கி ஷெராப், சௌரவ் சுக்லா, தாரா, ஜெயஸ்ரீ, பேடா ஹரிஸ்மிதா நடித்து உள்ளார்கள். திரைக்கதை வசனம் ஜெ.பி.சரவணன். ஒளிப்பதிவு மாத்யூராஜன் - ஜெயன். கதை எழுதி இயக்கியிருப்பது 9 வயது சிறுவன் கிஷன். விசி. பிலிம் மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.சாலையோரத்தில் கிடக்கிறான் ஓர் அனாதைச் சிறுவன். அவனை எடுத்துக் கொண்டு போய் வளர்க்கிறாள் ஏழைக் கிழவி ஒருத்தி. குப்பத்தில் வளரும் அவனுக்கு "ஸ்லம்" என்று பெயர் வைக்கிறார்கள். குப்பை பேப்பர் பொறுக்கும் வேலையில் ஈடுபட்டு தினமும் ஏதாவது சில்லறை சம்பாதிக்கிறான்.அவனுக்குப் பள்ளிக்குப் போகும் ஆசை வருகிறது. படிக்கும் விருப்பம் வருகிறது. அக்கம் பக்கம் இருப்பவர்கள் இது வேண்டாத வேலை என்று அவனை அலட்சியப்படுத்த, அவன் முழு முயற்சியில் இறங்குகிறான். பள்ளியில் சேர எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருக்க தனியாகவே புத்தகங்களைப் படித்து பலவற்றையும் கற்றுக் கொள்கிறான். ஒவ்வெரு வகுப்புப் பாடத்தையும் படிக்கிறான்.ஆனால் அவனுக்குப் பள்ளியில் இடம் தர விதிகள் குறுக்கே நிற்கின்றன. 9 வயது சிறுவனை முதல் வகுப்பில் வேண்டுமானால் சேர்க்கலாம் என்கிறார்கள். அவனுக்கோ ஐந்தாம் வகுப்பு பாடமே அத்துப்படியாக இருக்கிறது. இந்நிலையில் அவன் தனது அறிவுத் திறமையால் உயர்நிலை வகுப்புக்கு தகுதியாகிவிடுகிறான். அவனை விதிவிலக்காகக் கருதி சிறப்புத் தேர்வுக்கு அனுமதிக்கக் கோரி ஆதரவு பெருகுகிறது.சட்டம் திருத்தப்பட்டு ஸ்லம் உயர்நிலை வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெறுவதே "சாதனை" படத்தின் கதை.இப்படத்தில் நடிப்பில் டிஸ்டிங்ஸ்டனில் பாஸாகி விடுகிறான் இயக்குநரும் 9 வயது சிறுவனுமாகிய கிஷன். ஆயா ஆயா என உருகும் போதும் பேப்பர் பொறுக்கும் சிறுவர்களுடன் காகா பாயிடம் டீ குடிக்க கலாய்க்கும் போதும் கான்வென்ட் சிறுவர்களிடம் கலாட்டா செய்யும் போது கலகலப்பு. ஆயா இறந்ததும் அழும் காட்சியில் நெகிழ்ச்சி.தனித்தேர்வுக்கு தனியாக நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருவது கம்பீரம் என அசத்துகிறான் கிஷன். யார் அந்த ஆயா.. பாசத்தை பிழிகிறாரே.. நல்ல நடிப்பு. டீச்சராக வரும் தாரா, அவரது தோழி ஜெயா இருவரும் மட்டுமல்ல முதல் அமைச்சராக வரும் ஜாக்கி ஷெராப்பும் நினைவில் நிற்கின்றனர். அந்த ரங்கனும் கூட."முடியும் முடியும்", "அ ஆ இ ஈ" இரண்டும் நம்பிக்கையூட்டும் நல்லெண்ண வரிகள் உள்ள பாடல்கள். "ரங்காவின் மேலே கோபம் எனக்கு" கலகலப்பு தரும் பாடல். படம் முழுதும் கண்ணியமான கதையை களப்படுத்தி எல்லாருக்கும் நல்ல கல்வி வேண்டும் என்ற கருத்தை வளப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். ஏதோ சிறுவர் கதை போலல்லாமல் அனைவரும் பார்க்கும்படி போரடிக்காமல் திரைக்கதை பின்னியிருக்கிறார் சரவணன். கிஷனின் நம்பிக்கை முயற்சி வீண் போகவில்லை. நிஜமாகவே இது 9 வயது சிறுவனுக்குச் சாதனை தான்.
சட்டம் திருத்தப்பட்டு ஸ்லம் உயர்நிலை வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெறுவதே "சாதனை" படத்தின் கதை.இப்படத்தில் நடிப்பில் டிஸ்டிங்ஸ்டனில் பாஸாகி விடுகிறான் இயக்குநரும் 9 வயது சிறுவனுமாகிய கிஷன். ஆயா ஆயா என உருகும் போதும் பேப்பர் பொறுக்கும் சிறுவர்களுடன் காகா பாயிடம் டீ குடிக்க கலாய்க்கும் போதும் கான்வென்ட் சிறுவர்களிடம் கலாட்டா செய்யும் போது கலகலப்பு. ஆயா இறந்ததும் அழும் காட்சியில் நெகிழ்ச்சி.தனித்தேர்வுக்கு தனியாக நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருவது கம்பீரம் என அசத்துகிறான் கிஷன். யார் அந்த ஆயா.. பாசத்தை பிழிகிறாரே.. நல்ல நடிப்பு. டீச்சராக வரும் தாரா, அவரது தோழி ஜெயா இருவரும் மட்டுமல்ல முதல் அமைச்சராக வரும் ஜாக்கி ஷெராப்பும் நினைவில் நிற்கின்றனர். அந்த ரங்கனும் கூட."முடியும் முடியும்", "அ ஆ இ ஈ" இரண்டும் நம்பிக்கையூட்டும் நல்லெண்ண வரிகள் உள்ள பாடல்கள். "ரங்காவின் மேலே கோபம் எனக்கு" கலகலப்பு தரும் பாடல். படம் முழுதும் கண்ணியமான கதையை களப்படுத்தி எல்லாருக்கும் நல்ல கல்வி வேண்டும் என்ற கருத்தை வளப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். ஏதோ சிறுவர் கதை போலல்லாமல் அனைவரும் பார்க்கும்படி போரடிக்காமல் திரைக்கதை பின்னியிருக்கிறார் சரவணன். கிஷனின் நம்பிக்கை முயற்சி வீண் போகவில்லை. நிஜமாகவே இது 9 வயது சிறுவனுக்குச் சாதனை தான்.
No comments:
Post a Comment