Thursday, December 21, 2006

ஈபே ebay பற்றி அறிந்து கொள்ளுங்கள்...

வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க முடியுமா?.முடியும் என்கிறது இன்றைய தொழில் நுட்பம்.ஆன்லைனில் உங்களிடம் உள்ள பொருட்களை ஏலம் இட்டு அல்லது விற்று பணம் ஈட்ட வழி இருக்கிறது என்கிறார்கள் இந்த ஈபேயர்கள் - (ebayers).வீட்டிலுள்ள உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை பிறர்க்கு விற்கலாம் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதைஅதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay) பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அதற்கு நாம் பண்ண வேண்டியது என்ன?ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ணவேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htmஉலகளாவிய ஈபே தளம் (http://www.anrdoezrs.net/click-2122822-5902069).இந்திய ஈபே தளம் (www.ebay.in). உங்களுக்கு பொருட்கள் கிடைக்காவிட்டால்...? நீங்கள் இதைப்பற்றி பே பால் (paypal)உடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்கள் உங்களது சுட்டெண்கள் கேட்பார்கள், அதையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் பேபால் (paypal) மூலமாக தான் பணத்தை பரிமாற்றம் செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொள்வதால் உங்கள் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ, பிற்காலத்தில் இப்படியான ஏமாற்று வேலைகளை தடுக்கலாம். பேபால்(paypal) நிறுவனம் சில விற்பனையாளர்களிடம் ஏமாந்தால் பணத்தை மீளப்பெற்றுத்தடும். ஆனல் ஈழம் ஸ்ரோர் எப்படியோ தெரியாது. நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொண்டால், அவர்கள் உதவிகள் அல்லது ஆலோசனை சொல்வதோடு, ஈழம் ஸ்ரோர் கு கண்டிப்பாக கணக்கு (account) கொடுக்க மாட்டார்கள். இந்த இணையத்தினை பாருங்கள். பே பால் என்ன சொல்கின்றார்கள் என அறியத்தாருங்கள். உங்கள் பணத்தை அல்லது பொருளை பெற நான் உதவி செய்கின்றேன். இது ஈபே (ebay) என்ற தளத்தில் வாங்கினால் எப்படி பணத்தைப் பெறுவது என்பது பற்றியது... நீங்களும் அவர்களை (paypal) தொடர்பு கொண்டு அறியப்படுத்துங்கள் உங்கள் பரிமாற்ற இலக்கக்களுடன். https://www.paypal.com/uk/cgi-bin/webscr?cmd=p/gen/ua/policy_pbp-outside

No comments: